மேலும் செய்திகள்
ஓட்டுக்காக எதையும் செய்வார் மோடி: சொல்கிறார் ராகுல்
4 hour(s) ago | 3
பெங்களூரு : ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக, கர்நாடகாவின் மடாதிபதிகள் நேற்று அயோத்திக்கு புறப்பட்டனர்.அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடப்பதை முன்னிட்டு நாடே களைகட்டியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இவ்விழாவில் பங்கேற்பதற்காக, நாட்டின் பலவேறு மடாதிபதிகளுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், கர்நாடகாவில் இருந்து, 150க்கும் அதிகமான முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, காங்கிரசின் மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அயோத்திக்குச் செல்ல உள்ளனர்.காகினெலே கனக மஹா சமஸ்தான குருபீடத்தின் நிரஞ்சனானந்த மஹா சுவாமிகள்; சித்ரதுர்கா மாதார சென்னைய்யா குருபீடத்தின் பசவமூர்த்தி மாதார சென்னைய்யா மஹா சுவாமிகள்; ஹொசதுர்கா குஞ்சகிரி குஞ்சிடிகா மஹா சமஸ்தானத்தின் சாந்தவீர மஹா சுவாமிகள்; சித்ரதுர்கா சித்தரமேஸ்வர மஹா சமஸ்தானத்தின் போவி குருபீடத்தின் இம்மடி சித்தராமையா மஹா சுவாமிகள்;ஹரிஹர வால்மீகி குரு பீடத்தின் வால்மீகி பிரசன்னானந்த மஹா சுவாமிகள்; ஹரிஹர பஞ்மசாலி குரு பீடத்தின் வச்சனானந்த மஹா சுவாமிகள்; மதுரே பகீரத பீடத்தின் புருஷோத்தமானந்தபுரி மஹா சுவாமிகள் ஆகிய ஏழு மடாதிகள் நேற்று, பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து, அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றனர்.அங்கு நாளை நடக்கின்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கின்றனர்.
4 hour(s) ago | 3