உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமறைவு குற்றவாளி 5 ஆண்டுக்குப் பின் கைது

தலைமறைவு குற்றவாளி 5 ஆண்டுக்குப் பின் கைது

புதுடில்லி:கொள்ளை மற்றும் சட்டவிரோத ஆயுத வழக்குகளில், ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் இந்தர்புரியில் கைது செய்யப்பட்டார். தெற்கு டில்லி மதங்கிரைச் சேர்ந்தவர் சூரஜ் என்ற மைக்கேல்,32. கடந்த, 2020ம் ஆண்டு அம்பேத்கர் நகர் போலீசார் தொடர்ந்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.சூரஜ் மீது கொள்ளை, மோட்டார் வாகன திருட்டு மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருத்தல் உட்பட, 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அம்பேத்கர் நகர் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், இந்தர்புரியில் சூரஜ், 19ம் தேதி கைது செய்யப்பட்டார்.கடந்த, 2013ம் ஆண்டு முதல் இந்தர்புரியில் பல குற்றச்செயல்களை செய்து வந்த சூரஜ், சாலை விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். ஆனால், மருத்துவமனையில் இருந்து திரும்பியதும் மீண்டும் கொள்ளை மற்றும் திருட்டு ஆகியவற்றை செய்யத் துவங்கினார். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை