உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛சமரசம் கிடையாது: கட்சியை விமர்சித்ததற்காக நீக்கப்பட்ட காங்., தலைவர் உறுதி

‛‛சமரசம் கிடையாது: கட்சியை விமர்சித்ததற்காக நீக்கப்பட்ட காங்., தலைவர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ கடவுள் ராமர் மற்றும் நாடு ஆகியவற்றில் சமரசம் கிடையாது'' என கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி ஆச்சார்யா பிரமோத் கூறியுள்ளார்.உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர் ஆச்சார்யா பிரமோத். இவர் கடந்த 2017 ல் லக்னோ தொகுதியில் இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சமீப காலமாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வந்த இவர், ராமர் கோயில் கட்டியதற்காக பிரதமர் மோடியை புகழ்ந்து வந்தார்.சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வேண்டும் என ஆச்சார்யா பிரமோத் அழைப்பு விடுத்து இருந்தார். இதற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.இந்நிலையில், கட்சிக்கு விரோதமாகவும், கட்டுப்பாடுகளை மீறி நடந்து வருவதால் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என உ.பி., மாநில காங்கிரஸ் பரிந்துரை செய்தது. இதனை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் பிரமோத் ஆச்சார்யாவை நீக்க கார்கே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக ஆச்சார்யா பிரமோத் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், ‛‛கடவுள் ராமர் மற்றும் நாடு ஆகியவற்றில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்'' எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி