உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்; பாஜவுக்கு காங்., எம்பி சசி தரூர் வாழ்த்து

மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்; பாஜவுக்கு காங்., எம்பி சசி தரூர் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பாஜ அடைந்துள்ள வெற்றி வரலாற்று சாதனை என்று அத்தொகுதியின் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.கேரள உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் பினராயி விஜயனின் இடதுசாரிகள் ஜனநாயகக் கூட்டணிக்கு பெருத்த அடி விழுந்துள்ளது. பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. அதேபோல, பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி திருவனந்தபுரம் மேயர் பதவியை கைப்பற்ற உள்ளது.மக்களின் நோக்கம் தெளிவாக உள்ளதாக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தருர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்; இன்றைய கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளன. மக்களின் நோக்கம் தெளிவாக தெரிகிறது. கேரளாவின் ஜனநாயக உணர்வு வெளிப்பட்டுள்ளது.பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிலும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (UDF) மனமார்ந்த வாழ்த்துக்கள். இது வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாகும். ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு (LDF) மக்கள் தக்கம் பாடம் புகட்டியுள்ளனர். இது 2020 தேர்தலை விட மிகச் சிறப்பான முடிவாகும். அதேபோல, திருவனந்தபுரத்தில் பாஜ அடைந்துள்ள வெற்றி வரலாற்று சாதனையாகும். இடதுசாரி கூட்டணியின் 45 ஆண்டுகால முறையற்ற ஆட்சியை எதிர்த்து நான் பிரசாரம் செய்தேன். இறுதியில் ஆட்சி முறையில் மாற்றத்தை விரும்பிய மக்கள், மற்றொரு (பாஜ) கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.இதுவே ஜனநாயகத்தின் அழகு. காங்கிரஸ் கூட்டணி அடைந்த வெற்றியாக இருந்தாலும், எனது தொகுதியில் பாஜ கூட்டணி பெற்ற வெற்றியாக இருந்தாலும், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். கேரளாவின் வளர்ச்சிக்காகவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், நல்லாட்சிக் கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்காகவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Mariadoss E
டிச 13, 2025 19:42

உன் தொகுதியில தான் காங்கிரசு தோல்வி அடைஞ்சி இருக்கு அது உன் தோல்வி. உள்குத்து வேலை செஞ்சிட்டு பல்ல காட்டிக்கிட்டு இருக்கியே வெட்கமா இல்ல....


vivek
டிச 13, 2025 20:33

மரியதாஸ்....இந்திய முழுக்க காங்கிரஸ் கட்சி காணவில்லை.... உனக்கும்வெட்கமா இல்லையா


Balasubramanian
டிச 13, 2025 16:51

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இன்று! வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி! முதல்வர் சசி தரூர்!


Rameshmoorthy
டிச 13, 2025 16:37

How come No noise from his party leadership about vote chori


Chandhra Mouleeswaran MK
டிச 13, 2025 17:43

ராவுலுச் சேட்டன் பிரச்சாரத்துக்கு வந்நிரிக்கணம் வந்நிருந்தெங்ங்கில் ஈ காலாவதிக் காம்ரேட்டுக் களவாணிக் கம்யூனிஷ்ட்டு அம்பேல்னு போயிருக்குமாக்கம்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
டிச 13, 2025 16:18

அய்யய்யோ எரியுதே


Karunai illaa Nidhi
டிச 13, 2025 15:44

பாஜகவுக்கு சுப்ரமணியசாமி மாதிரி காங்கிரசுக்கு சசி தரூர். உள்ளுக்குள் இருந்தே குடைச்சல் கொடுப்பவர்கள்


Yaro Oruvan
டிச 13, 2025 15:25

தாமரை மலராது என்று கூவும் திராவிஷ அரசியவியாதிகள் தூக்கம் கெட்டது இன்று.. அங்கி மற்றும் லுங்கி பாய்ஸ் கதறல் ஆரம்பம்.. ஜெலுசில் ஸ்டாக் இல்லையாம்


Suresh Viggi
டிச 13, 2025 15:23

Congratulations bjp


Gokul Krishnan
டிச 13, 2025 15:18

கொச்சி கொல்லம் திருச்சூர் கண்ணூர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது


vivek
டிச 13, 2025 16:42

கோகுல. உன் ஏரியா. திருவனந்தபுரத்தில் பாஜக....இப்போ.... ஹி ஹி


பேசும் தமிழன்
டிச 13, 2025 18:50

எல்லாம் நன்மைக்கே.....கான் கிராஸ் கட்சிக்கு கூஜா தூக்கிய கம்மிகள் ஒழிந்தார்கள் அல்லவா அதுவே போதும்.... கான் கிராஸ் கட்சி வழக்கில் இருந்து காணாமல் போய் கொண்டே வருகிறது.....கடைசியாக கேரளா... பிறகு நேராக இத்தாலி தான்.


Prem
டிச 13, 2025 14:41

ஜால்ரா தரூர்


V Venkatachalam, Chennai-87
டிச 13, 2025 16:43

ஆமா ஆமா நம்ம குருமா வளவன் மாதிரி நான் முதலமைச்சர் ஆக கூடாதா 30 வருஷம் அரசியலில் இருக்கிறேன். இப்போ வந்தவன் து.மு. ஆயிடுறான் எனக்கு தகுதி இல்லையா ன்னு வெளியே தில் ஆக பேசிட்டு சால்வை வாங்கி போத்தி விட்டடுடுறது. இவர் அது மாதிரி எதுவும் செய்யலியே. சசி ஒரு டீசன்டான மனுஷன்.


ராஜாராம்,நத்தம்
டிச 13, 2025 16:50

எப்படி அறிவாலயத்தின் கொத்தடியாக இருக்கிறாயே அப்படியா?


Arjun
டிச 13, 2025 17:10

உண்மையை உரக்க சொல்லுகிறார்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ