உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய ரேஷன்கார்டுகள் வழங்க நடவடிக்கை

புதிய ரேஷன்கார்டுகள் வழங்க நடவடிக்கை

விக்ரம்நகர்:சாத் பண்டிகைக்கு மத்தியில், தகுதியான, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரேஷன் கார்டுகளை வழங்க மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் இம்ரான் ஹுசைன் உத்தரவிட்டுள்ளார்.ரேஷன்கார்டுகள் வழங்குவது தொடர்பாக உணவு மற்றும் வழங்கல் துறையின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது அமைச்சர் இதற்கான உத்தரவை அதிகாரிகளுக்கு வழங்கினார்.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, முன்னுரிமை அடிப்படையில், பொருட்கள் வினியோகத்தை துரிதப்படுத்த துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் வினியோகம் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.கூட்டத்தில், நவம்பர் மாதத்தில் புலம்பெயர்ந்த ஒருலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு 'ஒருநாடு ஒரு ரேஷன்கார்டு' திட்டத்தில் அத்தியாவசிப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டதாக அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் இம்ரான் ஹுசைன் கூறுகையில், “சாத் பூஜையை கருத்தில் கொண்டு, 'ஒருநாடு ஒரு ரேஷன்கார்டு' திட்டத்தின்படி, புலம்பெயர்ந்தோருக்கு டில்லியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அத்தியாவசப் பொருட்கள் எளிதாக கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ