உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிக வயதான ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பென்ஷன்: மத்திய அரசு

அதிக வயதான ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பென்ஷன்: மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:மிக அதிக வயதான ஓய்வூதியதாரர்களுக்கு உடல்நிலையை கருத்தில் வைத்து, கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, லோக்சபாவில் எழுத்துப்பூர்வமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:ஆறாவது மத்திய சம்பளக் கமிஷன் ஒப்புதலின்படி, 80 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 20 சதவீதம், 85 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 30 சதவீதம், 90 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 40 சதவீதம், 100 வயதை எட்டும் ஓய்வூதியதாரர்களுக்கு 100 சதவீதம் என்ற அடிப்படையில் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இந்த வயதை எட்டியதும், தானாகவே, கூடுதல் பென்சனை வங்கிகள் வழங்கத் துவங்கி விடும். வயது கூடும்போது, அவர்களின் உடல்நிலையை கருத்தில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவுரைகளை, சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் வங்கிகளுக்கு அவ்வப்போது அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

SRINIVASARAGHAVAN.S
மார் 25, 2025 19:23

எல்லா ஓய்வூதியத்தையும் அரசு ஊழியர்களுக்கு மட்டும்தான் தருவீர்களா ? தனியார் ஓய்வூதியர்கள் அனாதைகளா ?


Ganesamuthu
மார் 22, 2025 11:40

Howabout retire people from private.


Abdulkader Tvr22
மார் 21, 2025 16:26

இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது இதை செயல்படுத்தும் முன்பே உள்ள 60 வயது கடந்தவர்கள் புதிதாக இணைந்தவர்கள் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையும் தங்கு தடை இன்றி வழங்கினாலே போதும் அதை சிறப்பாக பாராட்டலாம்


SAMINATHAN S
மார் 21, 2025 14:32

தேங்க்ஸ்


SAMINATHAN S
மார் 21, 2025 14:31

Thanks


jothi ramya
மார் 21, 2025 12:24

குட் நியூஸ் தெரிவியுங்கள் நன்றி


ramasundaram m
மார் 20, 2025 19:47

80, 90 and 100 years age completed Pensioners are getting extra 20, 30,40 and 50 % as per the previous UPA II Central Govt orders led by PM DR Manmohan Singh ji. So the Minister of State for Home affairs in present Central Govt led by PM Shri Modi ji replied in Parliament is repentance of the existing orders .2.However,Central Govt Pensioners expectation is Pension may be revised at 5% increase after completion of 75 ,80,85,90,95 and 100 years of age as per previous Parliamentary Committee Recommendations of PM Shri Modi ji BJP Central Govt I . Hope a positive orders to such aged Pensioners. M.Ramasundaram


kulandai kannan
மார் 20, 2025 13:11

வயது கூட கூட பணத்தின் தேவை குறைகிறது. எதற்கு கூடுதல் பென்ஷன்??


P Chandrasekaran Chandrasekaran
மார் 20, 2025 10:45

அருமையான பதிவு. ஆனால் நான் 1944 அக்டோபர் 31ல் பிறந்த முன்னாள் ராணுவ ஊழியர். அக்டோபர் 2024ல் 80 வயது கடந்து விட்டது. இன்றுவரை 20 சதவித கொடுக்கப்பட்டதாக விவரம் இல்லை. ஆனால் எப்படியும் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என நம்பிக்கை உள்ளது


Pitchumani s
மார் 22, 2025 19:41

EPF 95 pensioners Hike?


Kumar Karuppaiah
மார் 20, 2025 09:12

இந்த நடைமுறை பல வருடங்களாக உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை