உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணீஷ் சிசோடியா ஜாமின் மனு :தீர்ப்பு ஒத்தி வைப்பு

மணீஷ் சிசோடியா ஜாமின் மனு :தீர்ப்பு ஒத்தி வைப்பு

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் ஆம் ஆத்மி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கை, சி.பி.ஐ, , அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் நடந்துள்ள பணமோசடி புகாரில் மணீஷ் சிசோடியா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடியான நிலையில், அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான பெஞ்ச், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஆக 07, 2024 05:26

உதவி மோசடியாளரையும் வெளியே விடுவது ஜனநாயகத்துக்கு ஆபத்து. சிறையில் இருந்து ஆள்வதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.


மேலும் செய்திகள்