உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீட் கிடைத்ததும் சிவசேனாவுக்கு தாவிய பா.ஜ., செய்தி தொடர்பாளர்

சீட் கிடைத்ததும் சிவசேனாவுக்கு தாவிய பா.ஜ., செய்தி தொடர்பாளர்

மும்பை : மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷைனாவுக்கு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பில் சீட் வழங்கப்பட்டதும், அவர் பா.ஜ.,வில் இருந்து அதிரடியாக விலகி சிவசேனாவில் இணைந்தார்.மஹாராஷ்டிராவில், நவ., 20ல் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், மாநிலத்தை ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., இணைந்து, 'மஹாயுதி' என்ற பெயரில் ஒரு அணியாக போட்டியிடுகின்றன.இவர்களை எதிர்த்து காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்., ஆகிய கட்சிகள், 'மஹா விகாஸ் அகாடி' என்ற பெயரில் களமிறங்கியுள்ளன. இந்நிலையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளரான ஷைனா, மும்பையின் வொர்லி தொகுதியில் போட்டியிட கட்சியில் சீட் கேட்டிருந்தார். ஆனால் அந்த தொகுதி, ஏக்நாத் ஷிண்டே அணியில் மிலிந்த் தியோராவுக்கு ஒதுக்கப்பட்டது. அவர், உத்தவ் மகன் ஆதித்யா தாக்கரேவை எதிர்த்து போட்டியிடுகிறார்.இதனால் சோர்வடைந்த ஷைனாவுக்கு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பில் மும்பாதேவி தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் பா.ஜ.,வில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில், சிவசேனாவில் நேற்று இணைந்தார்.சிவசேனாவில் இணைந்தாலும் பிரதமர் மோடி, மஹாராஷ்டிரா துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kulandai kannan
அக் 30, 2024 20:45

இது பாஜகவும் அதன் கூட்டணி கட்சி ஷிண்டே சேனாவும் செய்த ஒப்பந்தப்படிதான் நடக்கிறது. கடந்தமுறை ஒருங்கிணைந்த சிவசேனா வென்ற தொகுதிகளில் ஷிண்டே கட்சியில் பலமான வேட்பாளர் இல்லாத பட்சத்தில், பாஜக பிரமுகர்களை ஷிண்டே சேனா கட்சியின் சார்பாக நிறுத்தியிருக்கிறார்கள்.


J.V. Iyer
அக் 30, 2024 04:23

இது கேவலத்திலும் கேவலமாக உள்ளதே?


JAISANKAR
அக் 30, 2024 04:15

ஷிண்டே சிவ சேனாவின் MLA.க்களும் பாஜக வினராக இருக்க வேண்டும்.


Natarajan Ramanathan
அக் 30, 2024 01:42

நம்ம ஊரில் மட்டும் ஏன் சட்டசபை உறுப்பினர்கள் ஒருவர்கூட இப்படி அழகாக இல்லை ?


பாமரன்
அக் 29, 2024 23:44

இந்த கொரளி வித்தைக்கு நம்ம பகோடாஸ் பாணியில் முட்டு குடுக்கனும்னா... ஒரே வீட்டில் ஒரு ரூம்ல படுக்க எடம் கிடைக்கலை.. அதனால் பக்கத்து ரூம்ல போய் படுத்தாங்க... இது காங் அவுரங்கசீப் காலத்திலும் நடந்தது தான்... என்னாது பக்கத்து ரூமில் வேற ஆளும் படுத்திருந்தாப்லயா... ஏய் ஆண்டிஇன்டியன்ஸ் ஓசி கோட்டர் கொத்தடிமை...


அருணாசலம்
அக் 30, 2024 20:46

அது சரி. இன்னிக்கு தயிர் வடை வைத்தார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை