உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இஸ்ரேல் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு

இஸ்ரேல் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. தற்போது, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த ஹமாஸ் அமைப்பின் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் கொல்லப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kijd0gj0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து, இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ராணுவ தளபதி முகமது டெயிப் உயிரிழந்தார். ஈரான் நேரடி தாக்குதலில் ஈடுபடும் என்ற அச்சத்தால், மத்தியக் கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.

விமானங்கள் ரத்து

இதனால் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N.Purushothaman
ஆக 02, 2024 14:22

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஏவுகணை தாக்குதலால் கொல்லப்பட்டார் என்கிற செய்தியே உண்மை தானா என்கிற சந்தேகம் வலுத்து உள்ளதாகவும் அதற்க்கு காரணம் அவர் கொல்லப்பட்ட வீடு மற்றும் சுற்றி உள்ள இடங்கள் அது போன்ற தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தால் உயிர்சேதம் அதிகரித்து இருக்கும் என்றும் ஆனால் அதை பற்றிய செய்திகளோ அல்லது வீடியோ புகைப்படங்களோ இதுவரை ஈரான் அரசு வெளியிடவில்லை என்றும் பல மத்திய கிழக்கு நாடுகள் மேற்கத்திய நாடுகள் கூறுகின்றனர் ...அதோடு நில்லாமல் அவர் குளிக்கும் போது குளியலறையில் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் சில புலனாய்வு நிறுவனங்கள் கூறுகின்றன ...எது எப்படியோ ஈரானில் உள்ள சிலரின் உதவி இல்லாமல் இந்த சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் அதை திசை திருப்பவே ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என கூறுவதாக அவர்கள் தெரிவிக்கும் கருத்தில் வலு இல்லாமல் இல்லை ...இதனிடையே இஸ்ரேல் இதுவரை அதைப்பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது .


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி