உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிளாஸ்க்கில் தங்கம் கடத்தல் விமான பயணி கைது

பிளாஸ்க்கில் தங்கம் கடத்தல் விமான பயணி கைது

பெங்களூரு: பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில், பிளாஸ்க்கில் வெளிப்புறத்தில் தங்க பொடிகளை கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டார்.சவுதி அரேபியாவில் இருந்து பயணி ஒருவர் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஜன., 28ம் தேதி சவுதி அரேபியாவில் இருந்து பெங்களூருக்கு 'ஜெட்டா' ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் வந்தது.இதில் வந்த பயணியரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் பிளாஸ்கை பரிசோதித்தனர். பிளாஸ்கின் வெளிப்புறத்தில் தங்கத்தை பவுடராக்கி பூசியிருந்தது தெரியவந்தது. 124 கிராம் எடை உள்ள இதன் மதிப்பு, 7.52 லட்சம் ரூபாயாகும்.அந்த பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ