மேலும் செய்திகள்
மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
12 hour(s) ago
புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய உதவி அதிகாரியும், ரஷ்யாவின் கடல்சார் துறையின் தலைவருமான நிகோலய் பத்ருஷேவுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். நிகோலய் பத்ருஷேவின் இந்த இந்தியப் பயணத்தின் போது, தேசிய கடல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பிஸ்வஜித் தாஸ்குப்தாவும் சந்தித்து பேசினார். இரு தரப்பினரும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தனர். முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் ரஷ்யா சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவுடன் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இந்தியா - ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வர முடிவு செய்துள்ளார். இந்த சூழலில், இருநாடுகளின் தலைவர்களும், அதிகாரிகளும் அடுத்தடுத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
12 hour(s) ago