உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 எருமை மாடு வாங்கி கட்டியிருக்கலாம்; தினமும் 40 லிட்டர் பால் கிடைத்திருக்கும்: ஐபோன் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி

2 எருமை மாடு வாங்கி கட்டியிருக்கலாம்; தினமும் 40 லிட்டர் பால் கிடைத்திருக்கும்: ஐபோன் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆப்பிள் ஐபோன், ஐபேட் பயன்படுத்துவோரிடம் இருந்து தரவுகள் திருடப்படலாம். ஆபத்தை தடுக்க மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும்' மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனமும் அவ்வப்போது எச்சரிக்கை விடுகிறது. இதனால் லட்சக்கணக்கில் செலவழித்து போன் வாங்கியவர்கள், கடும் அதிருப்தியில் உள்ளனர்.கடந்த 2021ம் ஆண்டில் இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவி்ல எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேரின் ஐபோன்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, மீண்டும் எச்சரிக்கை செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

பணம் பறிக்க முயற்சி

இது பற்றி உலகம் முழுவதும் தங்கள் நிறுவன போன் உபயோகிப்பவருக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. 'ஆப்பிள் போன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோரின் சாதனங்கள் உளவு மென்பொருள் தாக்குதலுக்கு உள்ளாகலாம்' என்று அந்நிறுவனமே தெரிவித்துள்ளது. போன்களில் உளவு மென்பொருள் தாக்குதல் நடத்தி, பணம் பறிக்கவும் வாய்ப்புள்ளதாக, இணைய வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆப்பிள் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் பீதியை கிளப்பியுள்ளது.

எச்சரிக்கை

மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆப்பிள் தயாரிப்பான ஐபோன் உள்ளிட்ட சாதனங்களில், பயனர்களின் முக்கிய தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது. ஆப்பிள் மென்பொருள்களான, 17.6 and 16.7.9 க்கு முந்தைய iOS and iPadOS வெர்ஷன்கள் (version) , 13.6.8 க்கு முந்திய macOS Ventura வெர்ஷன்கள்,12.7.6 க்கு முந்திய macOS Ventura வெர்ஷன்கள்,12.7.6 க்கு முந்திய macOS Monterey வெர்ஷன்கள், 10.6 க்கு முந்திய watchOS வெர்ஷன்கள்,17.6 க்கு முந்திய tvOS வெர்ஷன்கள், 1.3 க்கு முந்தைய visionOS வெர்ஷன்கள், 17.6 க்கு முந்தைய Safari வெர்ஷன்கள் ஆகியவை பயன்பாட்டில் இருக்கும் சாதனங்கள் அதிக ஆபத்தில் இருக்கின்றன.

தரவுகள் திருடப்படலாம்

ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படலாம். ஆபத்தை தடுக்க மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் எச்சரிக்கை குறித்து ஆப்பிள் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி

இப்படி ஆப்பிள் நிறுவனம் ஒரு பக்கம், அரசு தரப்பு ஒரு பக்கம் மாறி மாறி எச்சரிக்கை விடுப்பதால், ஐபோன் பயனாளர்கள் மத்தியில் அச்சமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.ஒரு லட்சம் ரூபாய், ஒன்றரை லட்சம் ரூபாய் செலவழித்து ஆப்பிள் ஐபோன் வாங்கியதற்கு, வீட்டு வாசலில் 2 எருமை மாடுகளை வாங்கி கட்டியிருந்தால் கூட, தினமும் 40 லிட்டர் பால் கறந்திருக்கலாம் என சலித்துக் கொள்கின்றனர், ஐபோன் பயனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Senthoora
ஆக 08, 2024 16:24

எருமை மாட்டை பாக்கெட்டில் வைக்கமுடியாது, ஆனால் ஐ போனை பகெட்டுல் வைத்தால் Bill தான் தண்ட செலவு வரும்.


Vijay D Ratnam
ஆக 08, 2024 13:54

ஆன் பொத்தான், ஆஃப் பொத்தான் இருந்த நோக்கியா 3310 செல்போன்தான் சார் சேப்டி. மெமரி கார்டே கிடையாது. போட்டோ, வீடியோ, நெட், வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்ட்டா அக்கப்போரெல்லாம் கிடையாது. தரவுகளை எவனாலும் திருட முடியாது. திருடன் கூட அந்த மாடலை திருடமாட்டான்.


அப்பாவி
ஆக 08, 2024 12:47

இப்பவும் ஒண்ணும் குறைஞ்சு போயிடலை. ரெண்டு எருமை வாங்கிட்டு மேய்க்கப் போங்க. போனைத் தூக்கி குப்பைல போடுங்க.


Ramesh Sargam
ஆக 08, 2024 12:34

உங்கள் வேதனை புரிகிறது. ஆனால் எருமை மாட்டை உங்கள் பாக்கெட்டில் வைக்க முடியாதே....


Ramesh Sargam
ஆக 08, 2024 12:23

பேசாம மீண்டும் நாம் டயல் செய்யும் போன்களை பயன்படுத்த துவங்க வேண்டும்.


Balasubramanian
ஆக 08, 2024 12:08

தெருவில் நின்று பாருங்கள்! ஒரு நிமிடத்தில் ஒரு பென்ஸ் அல்லது பார்ஷ் போன்ற மிக விலை உயர்ந்த கார் ஒன்றாவது கண்ணில் படும்! உபயோகத்தை விட விலை மற்றும் பகட்டு தான் பெருமை என்று மனிதர்கள் நினைக்கும் வரை இத்தகைய ஏமாற்றுக்காரர்கள் இருக்கவே செய்வார்கள்


KRISHNAN R
ஆக 08, 2024 11:01

ஆதார் மொபைல் அண்ட் பேங்க் லின்கிங் வழக்கில் பல விவாதிக்காமல் முடிந்து விட்டது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி