உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலுக்காக தான் காங்கிரசுடன் கூட்டணி : கெஜ்ரிவால் பேட்டி

தேர்தலுக்காக தான் காங்கிரசுடன் கூட்டணி : கெஜ்ரிவால் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காங்கிரஸ் கட்சியுடனான திருமண பந்தம் தேர்தல் வரை தான் என டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார்.‛‛இந்தியா டுடே'' செய்தி சேனலுக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி, ஜூன் 04-ம் தேதி மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது.அது தான் லோக்சபா தேர்தலில் ‛‛ இண்டியா '' கூட்டணி பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கப்பபோகிறது.இத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், ரஷ்யாவில் அதிபர் புடினின் ஆட்சி போன்று சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறும். எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் தள்ளப்படுவர். ஒரு தேசம், ஒரு தேர்தல், என பா.ஜ., கொணடு வர திட்டமிட்டுவது ஜனநாயகத்திற்கு ஆபத்து.எனவே பா.ஜ.,வின் சர்வாதிகார ஆட்சி மீண்டும் அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவும், நாட்டை காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் ‛‛இண்டியா'' கூட்டணியில் ஆம் ஆத்மி இணைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான திருமண பந்தம் லோக்சபா தேர்தல் வரை தான். நிரந்தரம் அல்ல. என்மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என பிரதமர் மோடி பேட்டி ஒன்றில் கூறி ஒப்புக் கொண்டுள்ளார். எனது கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் மீது ஊழல் புகார் கூறி சிறையில் அடைத்தது பா.ஜ., .அவர்கள் பா.ஜ.வில் இணைந்தால் உடனே ஜாமின் கிடைக்கும் என்றெல்லாம் மிரட்டியுள்ளது. என் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி என்னை கைது செய்து சிறையில் அடைத்ததால் எனது இமேஜ் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மீண்டும் நான் சிறைக்கு செல்வது பற்றி எனக்கு கவலையில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க என்னை ஆயுள் முழுதும் சிறையில் வைத்தால் அதனை ஏற்றுக்கொள்ள தயார். அதற்காக நான் எந்த சூழ்நிலையிலும முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்.ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் எனது உதவியாளர் மீதான புகார் இதுவரை நிரூபிக்கப்பட வில்லை.கோர்ட்டில் வழக்கு நடைபெறுவதால் கோர்ட் முடிவு செய்யும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sahadevan R
மே 30, 2024 12:23

டெல்லியில் மட்டும் தான் உங்களோடு கூட்டணி பஞ்சாபில் தனித்து தான் நிற்கிறது. நீங்கள் 28 காட்சிகளில் ஒன்று அவ்வளவு தான் தெலுங்கானா போல் டெல்லியில் உங்களை தூக்கி போட முடியும்


venugopal s
மே 30, 2024 12:09

பிறகு என்ன


ஆரூர் ரங்
மே 30, 2024 11:43

எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். எந்தப் பதவியும் வேண்டாம், ஊழல் காங்கிரசை ஒழிப்பேன் என்று அரசியல் வாழ்க்கையைத் துவக்கியவர்.


பேசும் தமிழன்
மே 30, 2024 08:53

நீங்கள் பேசாமல் கட்சியை கலைத்து விட்டு.... கான் கிராஸ் கட்சியில் சேர்ந்து விடலாம்..... எதற்க்கு தனியாக கடை நடத்தி கொண்டு ???


Kasimani Baskaran
மே 30, 2024 05:55

கல்யாணம் முடிந்தவுடன் விவாகரத்து... வெளங்கும்


A Viswanathan
மே 30, 2024 16:21

இது தான் இவரின் சுயரூபம்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ