உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் மீது கூட்டணி கட்சியினருக்கே நம்பிக்கை இல்லை: பா.ஜ., தாக்கு

காங்கிரஸ் மீது கூட்டணி கட்சியினருக்கே நம்பிக்கை இல்லை: பா.ஜ., தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் கட்சி மீதும், ராகுல் மீதும் கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து ஷேசாத் பூனவாலா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: சில நாட்களுக்கு முன்பு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2 தொகுதிகள் கொடுக்க கூட காங்கிரசுக்கு தகுதியில்லை. எல்லா இடங்களிலும் நான் தனித்து போட்டியிடுகிறேன் என்றார். பஞ்சாபில் 13 தொகுதியிலும், சண்டிகரில் ஒரு தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி மீதும், ராகுல் மீதும் கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை என்பதை ஒவ்வொரு மாநிலத்திலும் பார்க்கலாம். காங்கிரசுக்கு நாடு முழுவதும் போட்டியிட 200 அல்லது அதற்கும் குறைவான தொகுதிகள் மட்டும் கொடுக்கப்பட வேண்டும். ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை ஆரம்பித்ததில் இருந்து, யாரும் நியாயத்தைப் பற்றி பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
பிப் 14, 2024 00:19

காங்கிரஸ் ஒரு மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் என்று தெரிந்தும், அதில் பயணிக்க யார் வருவார்கள்? சிந்தியுங்கள் ப்ரோ. அப்படியாப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கே இந்த நிலைமை என்றால், இந்த ஜுஜுபி திமுக எம்மாத்திரம்?


அப்புசாமி
பிப் 13, 2024 17:28

இன்னும் இவிங்களுக்கு காங்கிரஸ் பத்துன பயம் இருந்துக்கிட்டே இருக்கு கோவாளு.


haei
பிப் 13, 2024 17:52

உன் பாஞ்சு லட்ச புலம்பல் போலத்தான் கோவாலு


Nagendran,Erode
பிப் 13, 2024 18:12

பல்லு போனாலும் உனக்கு நக்கல் போக மாட்டேங்குது கோவாலு!


A1Suresh
பிப் 13, 2024 17:08

கான் கிராஸ் கட்சி மீது உரிமையாளர் சோனியாவிற்கும் மகன் பப்வுவிற்கும் கூட நம்பிக்கை போய்விட்டது. அநேகமாக தேர்தலுக்கு பிறகு கட்சி கலைக்கப்படும்.


Kasimani Baskaran
பிப் 13, 2024 17:06

காங்கிரஸ் கட்சியினரே நம்பிக்கையில்லாமல் வெளியேறுகிறார்கள்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை