உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேற லெவல் சாதனை... ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு

வேற லெவல் சாதனை... ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு கண்டுள்ளது.உலகின் வெவ்வேறு பகுதியில் நடக்கும் போர்கள், பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம், நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வருகிறது; அந்நியச் செலாவணி கையிருப்பும், தங்கம் கையிருப்பும் கணிசமாக உயர்ந்து வருகின்றன.தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு கண்டுள்ளது. ரிசர்வ் வங்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 2024ம் ஆண்டு நிலவரப்படி, ரிசர்வ் வங்கி 854.73 மெட்ரிக் டன் தங்கத்தை கையிருப்பு வைத்துள்ளது. இதில் 510.46 மெட்ரிக் டன் தங்கம் உள்நாட்டில் உள்ளது.. மீதமுள்ள தங்கம் சர்வதேச வங்கிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு குறிப்பிட்டத்தக்க உயர்வை கண்டுள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் 822 மெட்ரிக் டன்கள் தங்கம் கையிருப்பு இருந்தது. தற்போது செப்டம்பர் மாதம் இறுதியில் 854.73 மெட்ரிக் டன்களாக தங்கம் உயர்வை கண்டுள்ளது. மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாத வரை இடைப்பட்ட காலத்தில், மெட்ரிக் 32 டன் தங்கம் கையிருப்பு அதிகரித்துள்ளது.அக்டோபர் மாதம் துவக்கத்தில், அந்நிய செலாவணி கையிருப்பு முதல்முறையாக 700 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்தது சாதனை படைத்தது. அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 8.15 சதவீதமாக இருந்தது. தற்போது 9.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Subash BV
அக் 31, 2024 13:38

Bring back our gold to our land. PLAN TO REVIVE KOLAR GOLD FIELDS. STILL LOTS OF GOLD THERE. THINK BEYOND POLITICS. PUT THE BHARATH FIRST.


Indian
அக் 30, 2024 16:39

எல்லோருக்கும் பதினைந்து கிலோ தங்கம் இலவசம் பேங்க் அக்கௌன்ட் ல வரும் ...


Kumar Kumzi
அக் 30, 2024 16:54

பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா மூர்க்கனுக்கு இந்தியாவில் என்ன வேல


Jagannathan Narayanan
அக் 31, 2024 06:27

No use in crying


Sakthi,sivagangai
அக் 31, 2024 08:02

நீ உன் டொப்பிள் கொடி பாகிஸ்தானுக்கு போய் அங்கு கள்ள விசாவில் அரபு நாடுகளுக்கு போய் பிச்சை எடு நீ கேட்டதை விட அங்கு உனக்கு கிடைக்கும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 30, 2024 16:35

இதில் குருவி டிக்கியில் கொண்டுவந்த தங்கம் எவ்வளவு? ஒரு பொது அறிவு கேள்வி. அவ்வளவுதான். ஹி.ஹி.ஹி.


என்றும் இந்தியன்
அக் 30, 2024 16:32

இன்றைய நிலவரப்படி பணத்தின் மதிப்பு அந்த தங்கத்திற்கு ரூ 6,79,082.985 கோடி


Rpalnivelu
அக் 30, 2024 16:29

நம் மக்களிடம் குறைந்தது பத்தாயிரம் டன்னுக்கு மேலேயே இருக்கும். அப்படிப் பார்த்தால் பாரதமே ஓர் தங்க சுரங்கம்தான்


Srinivasan Krishnamoorthi
அக் 30, 2024 15:58

45,84,400 லட்சம் கோடி


ponssasi
அக் 30, 2024 15:14

தனிநபர் வருவாய் எந்த அளவு உள்ளது?


Amsi Ramesh
அக் 30, 2024 14:53

வருங்கால தலைமுறைக்கு வலிமையான இந்தியாவை விட்டுச்செல்வோம்


Kumar Kumzi
அக் 30, 2024 14:52

தேசத்துரோக கொங்கிரெஸ் ஆட்சிக்கு வந்தால் இருக்கும் தங்கம் ஆட்டய போட்டுருவானுங்க


Oru Indiyan
அக் 30, 2024 14:51

தீபாவளி பரிசாக தங்க கையிருப்பு. வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி