உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் தங்கிய ஹோட்டல் பில் தொகை: கர்நாடகாவுக்கு அனுப்பியது மத்திய அரசு

பிரதமர் தங்கிய ஹோட்டல் பில் தொகை: கர்நாடகாவுக்கு அனுப்பியது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. நாட்டில், புலிகள் பாதுகாப்பு திட்டம் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, 2023 ஏப்ரல் 9, 10, 11ல் மைசூரில் பொன் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பொன்விழா காணும் புலிகள் சரணாலயங்களில் ஒன்றான, பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில், 'ஜங்கிள் சபாரி' சென்றார். பின், மைசூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.விழாவுக்கான மொத்த செலவையும் ஏற்பதாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கூறியிருந்தது. ஆரம்பத்தில், 3 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டது. இந்த பணத்தை, விழா முடிந்ததும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், மாநில அரசுக்கு வழங்கியது. ஆனால், மொத்தம் 6.34 கோடி ரூபாய் செலவாகி இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன், மீண்டும் 1 கோடி ரூபாய் வழங்கியது.பாக்கி பணத்தை வழங்கும்படி மாநில அரசு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும் பலன் இல்லை. இதற்கிடையில், பிரதமர் மோடி, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தங்கிய மைசூரு நட்சத்திர ஹோட்டலின் பில், 80 லட்சம் ரூபாயும் செலுத்தப்படவில்லை. ஹோட்டலை முன்பதிவு செய்தது, மாநில வனத்துறை அதிகாரிகள் என்பதால், பணம் செலுத்துங்கள் என்று ஹோட்டல் நிர்வாகம் சமீபத்தில் கடிதம் அனுப்பியது.

தேர்தல் நடத்தை விதி

அதில், '80 லட்சம் ரூபாய் பில் தொகைக்கு, ஓராண்டு 18 சதவீதம் வட்டி சேர்த்து, 94.40 லட்சம் ரூபாய் செலுத்தும்படி குறிப்பிட்டிருந்தது. ஜூன் 1ம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த பணத்தை கேட்டு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு, மாநில அரசு கடிதம் அனுப்பியது.ஆனால், 'கர்நாடகாவில் நிகழ்ச்சி நடந்ததால், மாநில அரசு தான் செலுத்த வேண்டும்' என்று ஆணையம் நழுவியது. இந்த தகவல்கள் வெளியாகி, மூன்று நாட்களாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே ஹோட்டலுக்கு பணத்தை செலுத்துகிறோம் என்று இறங்கி வந்தன.இது குறித்து, மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, பெங்களூரில் நேற்று கூறியதாவது: ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய நபர்கள் வரும்போது, அவர்களின் விருந்தோம்பலை கவனிக்க வேண்டியது, மாநில அரசின் கடமை. ஆனால், கடந்தாண்டு ஏப்ரலில் புலிகள் திட்டத்தின் பொன்விழா நடந்த போது, கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன.

பாதுகாப்பு ஆணையம்

எனவே, அதில் மாநில அரசின் பங்கு ஏதும் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், மைசூரு தனியார் ஹோட்டலுக்கு, மாநில அரசே பாக்கி பில் தொகை 80 லட்சம் ரூபாய் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், பொன்விழா செலவில் பாக்கி உள்ள 2.34 கோடி ரூபாயை, பண்டிப்பூர் புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் வங்கி கணக்கிற்கு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நேற்று அனுப்பியது. 'இந்த பணத்தில் இருந்து, பிரதமர் தங்கிய ஹோட்டல் பில் தொகையும் ஓரிரு நாளில் செலுத்தப்படும்' என மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

spr
மே 28, 2024 12:17

"மொத்தம் 6.34 கோடி ரூபாய் செலவாகி இருந்தது" பொதுவாக மோடி பிரதமராக ஒரு நிகழ்வில் கலந்து கொண்டால் அதற்கு மத்திய அரசு செலவு செய்ய வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்லும் போதும் மத்திய அரசே செலவழிக்க வேண்டும். மாநில அழைப்பின் பேரில் கலந்து கொண்டால் மாநில அரசு செலவழிக்க வேண்டும் என்றாலும் இப்படிக் கோடிகளில் செலவழிப்பது மோடி போன்ற தலைவர்களுக்கு அழகா இந்தச் செலவீனங்களை குறைக்க வேண்டாமா? அப்படியென்ன செலவு யாரேனும் விளக்குவார்களா


vadivelu
மே 28, 2024 14:15

அதாவது இதுதான் 1947 ல் இருந்து வழக்கம் , அவ்வளவுதான்.


ganesha
மே 28, 2024 11:49

எல்லா செலவும் கம்மி தான் னு மொதல்ல தெரிஞ்சுக்கோங்க ஐயா வேணும்னா கேட்டு பாருங்க


venugopal s
மே 28, 2024 11:40

விழாவுக்கான மொத்தச் செலவையும் ஏற்பதாக ஒத்துக் கொண்ட தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தான் இந்தச் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


ஆரூர் ரங்
மே 28, 2024 11:40

கர்நாடகத்துக்கு அழைத்து ஓட்டல் புக்கிங் செய்தது கர்நாடக அரசின் வனத்துறை. பணம் செலுத்த தவறியதும் அவர்களே. தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி முதல்வர் கலந்து கொள்ள வில்லை. ஆனாலும் மத்திய அரசின் பெயரைக் கெடுக்க பில் கட்டாமல் விட்டுவிட்டு செய்தியை கசிய விட்டுள்ளார்கள். செலவுகளைக் குறைக்க பிரதமர் பெரும்பாலும் கவர்னர் மாளிகைகளில் தங்கும் செய்தியை மட்டும் மறைக்கிறார்கள்.


ஆரூர் ரங்
மே 28, 2024 11:35

அன்னிய முதலீடு கொண்டு வருவதாகக் கூறி முதல்வர், குடும்பம், ஆடிட்டர்கள், நண்பர்கள், அதிகாரிகள் புடைசூழ தனி விமானத்தில் பறந்த போது உ.பி யாரும் கணக்கே கேட்கவில்லை. சென்னை உட்பட நாட்டுக்கு உள்ளேயே கூட்டங்களை நடத்தி நாம் கனவிலும் நினைக்க முடியாத முப்பத்து மூன்று லட்சம் கோடி முதலீடுகள் திரட்டின.... முதல்வர் யோகியைப் பார்த்துக் கற்றுக் கொள்ளட்டும்.


Anantharaman Srinivasan
மே 28, 2024 10:32

இப்படிப்பட்ட எளிமையான ஒரு பிரதமரும் மத்தியரசும் கிடைத்தது நமது பாக்கியம்.


Velan Iyengaar
மே 28, 2024 09:40

இதெல்லாம் இந்த நேரத்தில் வெளியானது தான் பெரிய காமெடி ஊழல் ஒழிப்பு முகமூடி தேர்தல் பத்திர இவகரத்தில் கிழிந்து தொங்குது ... நான் மனித பிறவியே கிடையாது விஷயம் இன்னொரு விதத்தில் இன்னொரு முகமூடி கிழிந்து தொங்குது .... ரொம்போ சாதாரண டீக்கடைக்காரன் வாழ்க்கை இப்போ எப்படி ஹோ ஓஹோ என்று இருக்கு ....


Velan Iyengaar
மே 28, 2024 09:37

நம்ம அம்பத்தினரு இஞ்சுக்கார டீக்கடை ஏழைப்புதல்வனின் வாழ்க்கை முறை மக்களுக்கு தெரிந்துவிட்டது


R.RAMACHANDRAN
மே 28, 2024 09:01

செய்தி தாள்களில் போட்டு நாறடித்தால் தான் மத்திய மாநில அரசுகள் பிரச்னையை தீர்க்கின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.செய்தித்தாள்களில் பணம் கொடுத்து செய்தியை போடாவைக்கின்றனர்.அதற்கு இயலாதவர்கள் பிரச்சனைகளை தீர்ப்பது இல்லை.


பாமரன்
மே 28, 2024 08:43

.மிச்ச கலெக்சன் ஈடி மூலமாக செய்யப்படும்னு நம்பலாம்....?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை