| ADDED : மே 13, 2023 06:54 PM
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அமுதா ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கணவர் இரண்டாம் இடத்தை பிடித்து தோல்வி அடைந்தார்.தமிழத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருப்பவர் அமுதா. இவரது கணவர் ஷம்பு கல்லோலிகர். இவரும் ஐ. ஏ.எஸ் அதிகாரியாவார்.1991 ம் ஆண்டு தமிழ்நாடு பேட்சை சேர்ந்த இவர் கர்நாடகா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். மத்திய மற்றும் மாநில அரசுகளில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார் தமிழக ஆளுநரின் செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய பணியில் இருந்து வி.ஆர். எஸ் பெற்று கொண்டு சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ரேபக் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கினார். இத்தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட துரியோதன் மகாலிங்கப்பா 57,500 வாக்குகள் பெற்றார்.ஷம்பு கல்லோலிகர் 54,930 வாக்குகள் பெற்றார் . இருவருக்கும் இடையேயான வித்தியாசம் 2,570 வாக்குகள் மட்டுமே.இத்தொகுதியில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் 25,393 வாக்குகள்பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மகாவீர் லக்ஷ்மண் மோஹிதி 22,685 வாக்குகள்பெற்று நான்காம் இடத்தையே பெற முடிந்தது.