மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
புதுடில்லி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்று காங்கிரசில் இணைந்தார். ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தார். இவர் தன் கட்சியை காங்கிரசில் இணைக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தன் ஆதரவை ஷர்மிளா வழங்கினார். இந்நிலையில், நேற்று புதுடில்லி சென்ற அவர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சி எம்.பி., ராகுல் ஆகியோர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். தன் கட்சியையும், காங்கிரசுடன் இணைப்பதாக அறிவித்தார்.அப்போது அவர் கூறியதாவது:காங்கிரஸ் நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி; அது எப்போதும் நாட்டின் உண்மையான கலாசாரத்தை நிலைநிறுத்தி, தேசத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்புகிறது. இனி, அக்கட்சியின் ஒரு பகுதியாக ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா இருக்கப் போவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ராகுலை, நம் நாட்டின் பிரதமராக பார்க்க வேண்டும் என்பது என் தந்தையின் கனவாக இருந்தது; அதைச் செய்வதில் நான் ஒரு அங்கமாக இருக்கப் போகிறேன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சிஅடைகிறேன்.எந்த பொறுப்பு வழங்கப்பட்டாலும் அதை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார். தெலுங்கானா முதல்வரான ரேவந்த் ரெட்டி, தற்போது அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். விரைவில் ஷர்மிளா தெலுங்கானா காங்., தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago