உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போட்டியிட அஞ்சலி ஆர்வம்

போட்டியிட அஞ்சலி ஆர்வம்

உத்தரகன்னடா, : ''லோக்சபா தேர்தலில் போட்டியிட, எனக்கும் ஆர்வம் உள்ளது. சீட் கிடைத்தால் போட்டியிடுவேன்,'' என, காங்., முன்னாள் எம்.எல்.ஏ., அஞ்சலி நிம்பால்கர் தெரிவித்தார்.உத்தரகன்னடா, சிர்சியில் நேற்று அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் முதல் பட்டியல் ஒரு வாரத்துக்குள் வெளியாகும். யாருக்கு சீட் கிடைத்தாலும், நாங்கள் ஒற்றுமையுடன் அவரது வெற்றிக்காக உழைப்போம். உத்தரகன்னடா தொகுதியில், வேட்பாளராக வேண்டும் என, ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு சீட் கிடைத்தால் போட்டியிடுவேன்.உத்தரகன்னடா தொகுதியில், எட்டு தொகுதிகள் அடங்கியுள்ளன. இவற்றில் ஐந்து தொகுதிகளில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து தேர்தலுக்கு பணியாற்றுவோம். மேலிடத்தின் உத்தரவுக்கு கட்டுப்படுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை