உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிபந்தனைகளை ஏற்க ஹசாரே மறுப்பு

நிபந்தனைகளை ஏற்க ஹசாரே மறுப்பு

புதுடில்லி: உண்ணாவிரதம் இருக்க போலீசார் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள சமூக சேவகர் அன்னா ஹசாரே மறுத்து விட்டார். வலுவான லோக்பால் மசோதா உருவாக்க வலியுறுத்தி வரும் 16ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். இந்த உண்ணாவிரதத்திற்கு போலீசார் 3 நாட்கள் மட்டும் அனுமதி கொடுத்தனர். மேலும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்ட இடத்தில் இருக்கக்கூடாது. 72 மணி நேரத்தில் உண்ணாவிரத இடத்தை காலி செய்து விட வேண்டும் என நிபந்தனைகளை விதித்தனர். இந்நிலையில் இந்த நிபந்தனைகளை ஏற்க ஹசாரே மறுத்து விட்டார். மேலும் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், அமைதியான போராட்டத்திற்கு தேவையான இடத்தை பிரதமரால் பெற்றுத்தர முடியாது. தற்போதைய மத்திய அரசாங்கம் ஊழல் நிறைந்த அரசாக உள்ளதாக மக்கள் கருதுகின்றனர். போராட்டத்திற்கு இடங்களை ஒதுக்கி தராவிட்டால், ஆகஸ்ட் 16ம் தேதியன்று கோர்ட் எங்களை கைது செய்யட்டும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி