உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை; அன்னபூர்ணா சர்ச்சையில் வானதி சொல்வது இதுதான்!

நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை; அன்னபூர்ணா சர்ச்சையில் வானதி சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை; மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேரம் கேட்டதே ஹோட்டல் உரிமையாளர் தான் என்று பா.ஜ. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. வரி

கோவை கொடிசியாவில் தொழில்முனைவோர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி., வரி விகிதத்தில் உள்ள பிரச்னைகளை பன், ஜாம், க்ரீம் என்று பிரபல ஹோட்டல் உரிமையாளரான சீனிவாசன் பேசினார். அவரின் பேச்சு ஒரு பக்கம் வைரலான நிலையில், சீனிவாசன் ஜனரஞ்சமாக பேசியதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wa24ug67&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வீடியோ

கலந்துரையாடல் கூட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வும், அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதே சமயத்தில் ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, தமது பேச்சுக்கு மன்னிப்பும் கோரினார்.

பேட்டி

இந் நிலையில், கோவையில் பா.ஜ. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நிருபர்களிடம் பேசினார். அப்போது இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு;

கருத்து

ஜி.எஸ்.டி.,யில் என்ன குறை என்று கேட்பதற்காவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்தார். ஒரு நல்ல எண்ணத்தில் எனது வேண்டுகோளை ஏற்று, மத்திய அமைச்சர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரிடம் ஹோட்டல் உரிமையாளர் தமது கருத்தை சொல்கிறார்.

ஜிலேபி

அந்த நிகழ்ச்சியில், அவர் பேசும் போது நான் ஹோட்டலுக்கு வந்து காப்பி சாப்பிடுவேன், ஜிலேபி சாப்பிடுவேன், அப்புறம் சண்டையும் போடுவேன் என்று கூறினார். அதை கேட்ட எனக்கு அங்கேயே நான் எத்தனை முறை ஹோட்டலுக்கு வந்திருக்கேன் என்று பதில் தந்திருக்க முடியும், நான் ஜிலேபி சாப்பிட்டிருக்கேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் நான் ஒரு முறை கூட அந்த ஹோட்டலுக்குச் சென்று ஜிலேபி சாப்பிட்டது இல்லை. நான் அங்கு உடனடியாக பதில் அளித்திருக்க முடியும், ஆனால் நான் விரும்பவில்லை.

நேரம் கேட்டார்

மறுநாள் காலை 7 மணியில் இருந்து ஹோட்டல் உரிமையாளர் தொடர்ந்து என்னிடம் அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தார். தான் பேசியது தவறு, மன்னிப்பு கேட்கிறேன், இப்போது வருகிறேன், அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க நேரம் ஒதுக்கித் தரவேண்டும் என்று கேட்டார். பிசியாக நிகழ்ச்சிகளில் இருந்ததால் மதியம் பார்க்கலாம் என்று கூற அவரும் அதேபோன்று மதியம் 2.30 மணிக்கு ஹோட்டலுக்கு வருகிறார்.

மன்னிப்பு

நான் பேசின விஷயம் தவறுதான், தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டேன். சமூக வலைதளங்களில் வேறு மாதிரியாக வைரலாகி விட்டது. தவறாக போன ஒரு விஷயத்துக்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றார் அதன் பின்னர் அமைச்சரும் பேசினார். பின்னர் ஹோட்டல் உரிமையாளர் என்னிடமும், நீங்கள் ஒரு சகோதரி மாதிரிதான் என்று கூறி மன்னிப்பு கேட்டார்.

வருத்தம்

ஆனால் இந்த வீடியோவை ஒரு சில கட்சியினர் தங்களது சமூக ஊடகங்களில் வெளியிட்டு விட்டனர். பொதுமேடையில் எங்கள் எம்.எல்,ஏ.,வை பற்றி பேசியதால் எங்கள் கட்சிக்காரர்களுக்கும் அந்த வருத்தம் உள்ளது.

அரசியல் சாயம்

பெண் அரசியல்வாதிகளை கேலியாக பேசுவது நிறுத்தப்பட வேண்டும். ஹோட்டல் உரிமையாளர் பேசியது தவறு என்பதை உணர்ந்து அவராகவே முன்வந்து நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கூறினார். இதற்கு தி.மு.க., காங்., உள்ளிட்ட கட்சிகள் அரசியல் சாயம் பூசி பெரிதுபடுத்துகின்றன.இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Suresh sridharan
செப் 14, 2024 08:59

கணக்கு காட்டக்கூடாது கணக்கு கேட்கக் கூடாது அதுதான் கணக்கு. கடைக்காரர்களின் என்னா கணக்கு


Suresh sridharan
செப் 14, 2024 08:58

ஹோட்டலுக்கு நல்ல நேரமோ??? ஆரம்பமா ?இந்த அன்னபூர்ணா ஓனர்கிட்ட கேக்கணும்..??? அதே இட்டிலிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா 55 ரூபாய்?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 14, 2024 04:25

எது நடந்ததோ ந்து நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. தமிழ்நாடு பாஜாக்காவுக்கு பாடை நன்றாகவே கட்டப்படுகிறது.


Azar Mufeen
செப் 13, 2024 23:47

மிரட்டப்படாமலா மன்னிப்பு கேட்பதற்கு நேரம் கேட்டிருப்பார்


முருகன்
செப் 13, 2024 20:33

தவறை சுட்டிக் காட்டினால் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எண எதிர்ப்பது ஏன்


தமிழ்வேள்
செப் 13, 2024 20:22

முன்னர் வணிகவரி இருந்தபோதும் மக்களிடமிருந்து வசூலிக்க பட்ட தொகையில் பெரும்பகுதி கடை/நிறுவன உரிமையாளர்கள் வணிக வரி துறை அதிகாரிகளால் ஸ்வாஹா ஆக்கப்பட்டது . தற்போதைய ஜிஎஸ்டி வசூல் முறையில் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்ய இயலவில்லை என்பதால் வணிக கும்பல் மாநில வணிக வரி அதிகாரி கும்பலால் இம்மாதிரி பிரச்சினைகள் தூண்டிவிடப்படுகின்றன....


Sivaprakasam Chinnayan
செப் 13, 2024 20:03

First of all should understand that he has explained the difference GST rates in hotel foods. The minister should make uniform taxation and she has to understand the different GST rates for karam coffee and food. But all are speaking on political colour


Sathyanarayanan Sathyasekaren
செப் 13, 2024 18:59

இது திருட்டு திராவிட கழிசடைகளின் மடை மாற்றும் வேலை, நிர்மலா மேடம் அவர்கள் மத்திய அரசு கொடுத்த நிதிகளுக்கு கணக்கு கேட்ட தற்கு இந்த திருடர்களிடம் பதில் இல்லை அதை திசை திருப்ப ஒரு உப்பு சப்பு இல்லாத விஷயத்த கொத்தடிமை மீடியாக்கள் மூலம் திசை திருப்புகிறார்கள். அது புரியாமல், பிஜிபி உணர்ச்சிவசப்பட்டு போகிறார்கள். இதற்க்கு பதிலடியாக நிர்மலாமேடம் கேட்ட கேள்விகளை ட்ரெண்ட் ஆக்கவேண்டும்.


தாமரை மலர்கிறது
செப் 13, 2024 18:55

நகைச்சுவை என்ற பெயரில் தவறான தகவல்களை சொன்ன அன்னபூர்ணா உரிமையாளர் அவரது ஹோட்டல் மூடப்பட்டுவிடும் என்ற பயத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். நிதி அமைச்சருக்கே தவறான தகவல்களை சொல்பவர், வரி செலுத்தும்போது எப்படிப்பட்ட தவறுகளை இளைப்பார் என்பது ஊரறியும். இவரது ஹோட்டலுக்கு ரைடு விட்டு, மூடுவது, மற்ற முதலாளிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 14, 2024 04:22

இது தானே உங்களுக்கு தெரியும். தைரியம் இருந்தால் செஞ்சு காட்டு பாப்பம். உன்னோட வீரியத்தை.


Dharmavaan
செப் 13, 2024 18:41

வெறும் வாயை மெல்லுபவனுக்கு இது அவல்.. கேவலமான பிறவிகள் ஊதி பெரிதாக்குகின்றன


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை