உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் இது சகஜம் போல: 15 நாளில் 7வது பாலம் ‛‛பணால்

பீஹாரில் இது சகஜம் போல: 15 நாளில் 7வது பாலம் ‛‛பணால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் இன்று (ஜூலை 03) மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. இங்கு கடந்த 15 நாட்களில் மட்டும் 7 பாலங்கள் இடிந்து விழுந்தது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவான் மாவட்டத்தில் உள்ள கண்காய் ஆற்றில் இன்று பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. சமீபகாலமாக அங்கு கனமழை பெய்வதால், ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், பாலத்தின் கட்டுமான சுவரில் விரிசல் ஏற்பட்டு, பாலம் இடிந்து விழுந்தது.கடந்த 15 நாட்களில் பீஹார் மாநிலத்தில் மட்டும் 7 பாலங்கள் இடிந்து விழுந்து உள்ளன. தொடர் கனமழையால், கிசான்கஞ்ச் மாவட்டத்தின் தாக்கூர் கஞ்ச் பகுதியில் பண்ட் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.அதற்கு முன் கிழக்கு சம்கரன், அராரியா, சிவான், கிஷன்கஞ்ச், மதுபானி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தன. இதன் காரணமாக, முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஆளும் அரசை, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருவதால், கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R KUMAR
ஜூலை 03, 2024 21:50

பாலம் கட்ட சிமெண்ட் உபயோகிக்கவேண்டும். சிமெண்ட்டை திருடிவிட்டு, களிமண்ணை வைத்து கட்டினால், இப்படித்தான் போகும். குழந்தைகள் தீப்பெட்டிகளை வைத்தும், பிலேடிங் செட்டினை வைத்தும் விளையாடும் பொது இப்படித்தான் கலையும் அது போன்று பாலங்களை கட்டமுடியாது


venugopal s
ஜூலை 03, 2024 19:33

தமிழக மக்களின் வரிப்பணத்தை எல்லாம் இப்படி வீணாக்குகின்றனரே!


தாமரை மலர்கிறது
ஜூலை 03, 2024 18:32

கனமழையால் பாலம் இடிந்து விழுவது இயற்கை தான். இதை பெரிய செய்தியாக பரப்பவேண்டிய அவசியமில்லை.


ramesh
ஜூலை 03, 2024 20:54

மழை காலத்தில் ஆற்றை கடக்க தான் பாலம் . ஏதோ ஓன்று உடைந்தால் சரி எதிர்பாராமல் நடந்து விட்டது என்று சொல்லலாம் .ஆனால் இங்கே இரண்டு நாட்களுக்கு ஒரு பாலம் என்று விழுகிறது .பிஜேபி கூட்டணி ஆட்சி அபாரம் .ஊழல் இல்லா ஆட்சி .இதை தானே பீகார் மக்கள் விரும்புகிறார்கள்


Narayanan
ஜூலை 03, 2024 16:34

அவர்களைக்கொண்டுதான் தமிழகத்தில் பாலம் கட்டப்படுகிறது . பயமாக இருக்கிறது


Balasubramanian
ஜூலை 03, 2024 15:43

மக்கள் ஏன் தேஜஸ்வி யாதவுக்கு ஓட்டு போட மறுக்கின்றனர் தந்தையை போல பிள்ளை - குடும்ப கட்சிகளை ஆதரித்தால் இதுவே கதி! போக போக புரியும்


Anantharaman Srinivasan
ஜூலை 03, 2024 15:24

ஊழலுக்கான ஒரு தடயமும் கிடைக்கவில்லை. இன்றளவும் மேம்பாலங்கள் உறுதியாக நிற்கின்றன.


ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 15:14

லாலு கூட்டணி யில் நிதீஷ் அடிமையாக இருந்த காலத்தில் இது போல கட்டுமானங்கள் நிறைய நடந்துள்ளன. 5 ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு நிரந்தர ஜாமீனில் வெளியிலேயே இருக்கிறார். ஆனால் ஆளும் கூட்டணிக்கே அவஸ்தை.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ