உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு...: 25,000 காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு!

ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு...: 25,000 காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரயில்வே துறையில் பணியாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, ஓய்வு பெற்ற பணியாளர்களைக் கொண்டு 25,000 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.ரயில்வேதுறையில், ஓய்வு பெற்ற பணியாளர்களை பணியமர்த்த, முடிவு செய்துள்ளதாக, இரண்டு நாட்களுக்கு முன் ரயில்வே வாரியம் அறிவித்தது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இதனை தொடர்ந்து, தற்போது 25 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை இன்று தொடங்கிவிட்டது.இது குறித்து ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளதாவது:முதற்கட்டமாக, சூப்பரவைசர் முதல் டிராக்மேன் வரை நிரப்ப முடிவு செய்துள்ளோம்.65 வயதுக்கு உட்பட்ட, ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள், இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படுவர். சாத்திய கூறுகள் இருந்தால் அதற்கு மேலும் வாய்ப்பு அளிக்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் அனைத்து மண்டல ரயில்வேயின் பொது மேலாளர்களுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்து மருத்துவ தகுதி மற்றும் செயல்திறன் மதிப்பீடுகள் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்களை பணியமர்த்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.மீண்டும் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு, அவர் கடைசியாக மாத வருமானம் என்ன வாங்கினாரோ அதற்கு சமமான தொகை வழங்கப்படும். ஆனால் அடிப்படை சம்பளம் கழிக்கப்படும். டி.ஏ., உண்டு. மற்ற கூடுதல் சலுகைகள், ஊதிய உயர்வு கிடைக்காது.பணியமர்த்தப்படும் பணியாளர்கள், கடந்த 5 ஆண்டுகளில் நன்மதிப்பு பெற்றவராக இருக்க வேண்டும். அவர்கள் மீது எந்த குற்றநடவடிக்கை வழக்குகள் இருக்க கூடாது.வடக்கு-மேற்கு ரயில்வே மண்டலத்தில் மட்டும் 10 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
அக் 20, 2024 02:27

இளைஞர்கள் எல்லாம் அமெரிக்கா, ஐரோப்பான்னு ஓடிடறாங்க.


சாண்டில்யன்
அக் 19, 2024 20:06

இது நல்ல திட்டம் அவர்கள் குறைந்த கூலிக்கு மாடாய் உழைப்பார்கள் எனக்கு வயது காரணமாக வாய்ப்பிருக்காது


சாண்டில்யன்
அக் 19, 2024 20:03

ஓய்வு பெற்ற ஒரு ரயில்வே உயர் அதிகாரியை துறை மந்திரியாக நியமிக்க வேண்டும் ராணுவம் உள்ளிட்ட பல துறைகளில் ஓய்வு பெற்றவர்களை மந்திரியாக நியமிக்கும் போது இதுமட்டும் ஏன் கூடாது என்று புரிந்து கொள்ள முடிய வில்லை?தற்போதுள்ளவருக்கு ராசியில் தோஷமுள்ளது என்று அனுபவபூர்வமாக சொன்னால் கேட்பாரில்லை


Narayanan Sa
அக் 19, 2024 19:49

சூப்பர் சான்ஸ். மேலும் இது ஒரு புரட்சி. ஆனால் தொழில் சங்கங்கள் இதை வரவேற்காது. ஓய்வு பெற்றவர்களில் குடும்பங்களில் எவ்வளவு பிரச்சனை இருக்கும் என்பதை யாரும் நினைத்து பார்க்க மாட்டார்கள். எல்லோரும் பயன் பெற வேண்டும் என்பது தான் உண்மையான மகிழ்ச்சி.


sundarsvpr
அக் 19, 2024 19:25

ஊழியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் இளம் ஊழியர்களின் மன நிலை பாதிக்கப்படும். பணியில் சுணக்கம் ஏற்படும்.


சாண்டில்யன்
அக் 19, 2024 22:56

OC க்கள் ஆரம்ப கிரேடிலேயே இருபது ஆண்டுகள் தொடர்ந்தார்கள் கோட்டாவில் சேர்ந்தவர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒன்றாக நான்கைந்து பதவி உயர்வு பெற்று பத்தே ஆண்டுகளில் உயர் பதவிக்கு வந்தார்கள் அதன் பின் உயர வழியின்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்குமேல் C கிரேடிலேயே முடங்கி கிடந்தார்கள் சாதாரணமாக B கிரேடுக்கு CLASS IIஉயர முடியவில்லை


Ramesh Sargam
அக் 19, 2024 19:22

நம் நாட்டில் படித்து வேலை இல்லாத பல லட்சம் பேரில் ஒருசிலருக்கும் அந்த பணிவாய்ப்பு இல்லையா? அவர்களுக்கு யோக்கியதை இல்லையா? என்னய்யா நடக்குது ரயில்வே துறையில்?


முக்கிய வீடியோ