இஸ்ரோவுக்கு இன்னொரு வெற்றி: விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட்
அமராவதி: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, புவியை கண்காணிக்கும், 'இ.ஓ.எஸ்., - 08' செயற்கைக்கோளை சுமந்தபடி, 'எஸ்.எஸ்.எல்.வி., - டி3' ராக்கெட் இன்று (ஆகஸ்ட் 16) காலை, 9:17 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இ.ஒ.எஸ்., செயற்கைக் கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. எடை குறைந்த செயற்கைக்கோளை செலுத்த, எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vauhtw3e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிறப்பு அம்சங்கள்
* புவி கண்காணிப்பு செயல்பாட்டிற்காக, 'இ.ஓ.எஸ்., - 08' செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.50 கிலோ.
திட்டம் 100% வெற்றி
இஸ்ரோ தலைவர் சோம்நாத் அளித்த பேட்டி: புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்கான இ.ஒ.எஸ்., செயற்கைக் கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இது மிகவும் வெற்றிகரமான பணி.இந்த திட்டம் 100% வெற்றியடைந்துள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ராக்கெட் திட்டமிட்டபடி, செயற்கைக் கோளை துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.