வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Perfectly sentensed brother
பாகிஸ்தான் நாட்டிலிருந்து வரும் எல்லாவற்றையும் சுட்டுத்தள்ளுங்க. அந்த நாட்டு காத்துக்கூட இந்தியாவுக்குள் வரக்கூடாது.
சண்டிகர்: போதைப்பொருட்கள், ஆயுதங்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வருவதை தடுக்க, எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்களை பஞ்சாப் அரசு நிறுவி உள்ளது.காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த சூழலில், பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு இரவு நேரத்தில் ட்ரோன்கள் வாயிலாக ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு வீசப்படுகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4nsrxigz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த பொருட்கள் சமூக விரோத செயலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதை தடுக்கும் நோக்கத்துடன், பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டுவரும் ட்ரோன்களை முறியடிப்போம் என பஞ்சாப் அரசு கூறியிருந்தது. தற்போது, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வருவதை தடுக்க, எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு கருவிகளை பஞ்சாப் அரசு நிறுவி உள்ளது. இந்த கருவிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்தி வரும் ட்ரோன்களை துல்லியமாக, சுட்டு வீழ்த்தி தாக்குதல் திறன் கொண்டது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் என்பதால், பாகிஸ்தானின் கடத்தல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த ட்ரோன் எதிர்ப்பு கருவிகளை பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் நேரில் சென்று பார்வையிட்டார். அவருக்கு அதிநவீன தொழில்நுட்ப கொண்ட ட்ரோன் எதிர்ப்பு கருவிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
Perfectly sentensed brother
பாகிஸ்தான் நாட்டிலிருந்து வரும் எல்லாவற்றையும் சுட்டுத்தள்ளுங்க. அந்த நாட்டு காத்துக்கூட இந்தியாவுக்குள் வரக்கூடாது.