உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி சென்றுவிட்டு திரும்புகையில் சோகம்; பக்தர்கள் 4 பேர் பலி

திருப்பதி சென்றுவிட்டு திரும்புகையில் சோகம்; பக்தர்கள் 4 பேர் பலி

திருப்பதி: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது, திருப்பதி சென்றுவிட்டு திரும்பிய பக்தர்களின் வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக, திருப்பதி சென்றுவிட்டு திரும்பிய பக்தர்களின் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், பக்தர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் உயிரிழந்த 4 பேரும் ஸ்ரீ சத்யாசாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை