உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுக்குமாடி வீடு விற்பனை சரிந்தது

அடுக்குமாடி வீடு விற்பனை சரிந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், கட்டடங்களுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வீடுகள் விற்பனை, 11 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனையின்போது, நிலத்துக்கு கிரைய பத்திரமும், கட்டடத்துக்கு கட்டுமான ஒப்பந்தமும் பதிவு செய்யப்பட்டு வந்தது. தமிழக அரசு இந்த நடைமுறையை மாற்றி, நிலத்துக்கும், கட்டடத்துக்கும் ஒரே பத்திரமாக பதிவு செய்யும் புதிய முறையை டிச., 1ல் அமலுக்கு கொண்டு வந்தது.இதன் விளைவாக பத்திரப்பதிவுக்கான செலவு எகிறியது. இரு மடங்கு கட்டணம் செலுத்த நேரிட்டதால் வீடு வாங்க விரும்பியவர்கள் திகைத்தனர். வீடு வாங்கும் யோசனையை பலர் கைவிட்டனர். இது குறித்து, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' தென் மண்டல தேசிய துணை தலைவர் எஸ்.ஸ்ரீதரன். சென்னை பிரிவு தலைவர் எஸ்.சிவகுருநாதன், தமிழக பிரிவு தலைவர் ஆர்.இளங்கோவன், இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க நிர்வாகி எல்.சாந்தகுமார் ஆகியோர் கூறியதாவது:கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போன்று, தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்ட வீடுகளுக்கு, ஒரே பத்திரம் பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்துவதாக தமிழக அரசு கூறியது. ஆனால், அந்த மாநிலங்களில் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை முழுமையாக ஆராயாமல், நம் அதிகாரிகள் அவசர கோலத்தில், புதிய நடைமுறையை அறிவித்தனர்.இதில் கட்டடங்களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயிக்க, மூன்று நிலைகள் முதலில் அறிவிக்கப்பட்டன. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது திரும்ப பெறப்பட்டு, தெரு வாரியாக ஒரே மதிப்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், பதிவு கட்டணம் விதிப்பதில், மூன்று நிலைகள் இன்னும் தொடர்கிறது. * இதன்படி, 50 லட்சம் ரூபாய்க்குள் வரும் வீடுகளுக்கு, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம், 6 சதவீதம்* அதற்கு மேல், 3 கோடி ரூபாய் வரையிலான விடுகளுக்கு, 7 சதவீதம்* மூன்று கோடிக்கு மேல் மதிப்புள்ள வீடுகளுக்கு, 9 சதவீதம் என்ற கட்டண விகிதம் தொடர்கிறது.சென்னையில், 44 லட்சம் ரூபாய்க்கு ஒருவர் வீடு வாங்கினால், பழைய நடைமுறையில, பத்திரப்பதிவு செலவு 1.35 லட்சம் ரூபாயில் முடியும். அது தற்போது 2.91 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. 3 கோடியில் வீடு வாங்குபவர் 1.81 லட்சமும், 3 கோடிக்கு மேல் வீடு வாங்குபவர, 3.92 லட்சமும் பத்திரப் பதிவுக்காக செலவிட வேண்டியுள்ளது. இந்த பிரச்னைகளை பதிவுத் துறை அமைச்சரிடம் விரிவாக விளக்கினோம். ஆனால், பதிவுத் துறை அதிகாரிகள் அரசுக்கு தவறான தகவல்களை அளித்து, குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.தற்போது, தெரு வாரியாக வெளியிடப்பட்ட மதிப்புகளும் மக்களிடம் கருத்து கேட்காமல் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுவும் உண்மை நிலையை பிரதிபலிப்பதாக இல்லை. இந்த குளறுபடியால் ஒரே மாதத்தில் வீடுகள் விற்பனை 11 சதவீதம் சரிந்துள்ளது.வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவு கட்டணம் உயர்வு, கூட்டு மதிப்பு என, அடுத்தடுத்து சுமையை அதிகரிப்பதால் வீடு வாங்க விரும்பும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த விலை வீடுகளுக்கு 4 சதவீதம், அதிக விலை வீடுகளுக்கு 5 சதவீதம் என பதிவு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.கட்டுமான நிலையில் கட்டடம் இருப்பதாக, எப்படி பத்திரம் பதிவு செய்ய முடியும் என்ற குழப்பத்துக்கு, சட்ட ரீதியாக தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்து இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Saai Sundharamurthy AVK
ஜன 05, 2024 23:11

அடுக்கு மாடி குடியிருப்பு மிக மிக விலை அதிகம். வங்கி கடனுக்கான வட்டியும் அதிகம். வாங்குகின்ற சம்பளத்துக்கு தனியார் ஊழியர்களுக்கு கட்டுப்படியே ஆகாது. அரசாங்க ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் தான் ஒத்து வரும். எவ்வளவு வட்டி வேண்டுமானாலும் அவர்களால் கட்ட முடியும். 10 மணி நேரம், 12 மணி நேரம் என்று உழைப்பவர்களால் முடியாது. ☺️


M Ramachandran
ஜன 05, 2024 20:51

பேராசியின் செயல் இப்போ கையாரிப்பு அதிகரிக்கும்


Raghavan
ஜன 05, 2024 17:12

இப்படி செய்தால்தான் பொது ஜனங்கள் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை வாங்கமாட்டார்கள் அதனால் அவர்கள் காலி மனைகளை வாங்கிப்போடுவார்கள் அப்போது தான் மருமகனின் விற்காமல் இருக்கும் காலி மனைகள் விற்கும் என்கின்ற யோஜனையின் பேரிலேயே இந்த சட்டத்தை கொண்டுவந்துஇருந்தாலும் இருக்கலாம்.


munna
ஜன 05, 2024 16:38

அதிகாரிகள் என்றாலே குழப்பம் செய்பவர்கள் தானே..


raja
ஜன 05, 2024 13:25

அப்புறம் என்ன... ஸ்டாலின் தான் வந்தாரு விடியல் தான் தந்தாருண்ணு சொல்லி ஸ்வீட் எடு கொண்டாடு....


duruvasar
ஜன 05, 2024 11:51

இந்த கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு ஐ ஏ எஸ், மற்றும் ஐ பி எஸ் அதிகாரிகள் தான் தமிழக அரசை நடத்துகிறார்கள் என்ற பேச்சு ஏற்கனவே பெரும்பாலனவர்களிடம் இருப்பதாக தெரிகிறது. குறிப்பிடப்பட்டுள்ள இந்த குழப்ப நிலைமை அந்த மாதிரியான பேச்சுக்களுக்கு உரமிடுவதைப்போல் இருக்கிறது.


அப்புசாமி
ஜன 05, 2024 11:48

40, 50 லட்சம் விலைன்னா, ஒரு 10, 20 லட்சத்தை ப்ளாக்கில் குடுத்துட்டு, விலையைக் குறைச்சு பதிவிட்டு, குறைச்ச ஸ்டாம்பு டூட்டி கட்டும் திருட்டு திராவிடனுங்க, திருட்டு இந்தியனுங்க. இந்தியாவில் எல்லா இடத்திலும் இதே தான். முழிச்சுக்கிட்ட தமிழக அரசு.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 05, 2024 10:54

இவர்கள் மக்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தேவையில்லாத இலவசங்களை அறிவித்து ஒட்டு மொத்த மக்களையும் கசக்கி பணத்தை வசூலிக்கிறார்கள். இந்த கையாலாகாத தத்திகளை தேர்ந்தெடுத்த மக்கள் நன்றாக அனுபவிக்கட்டும். அப்படியாவது திருத்துகிறார்களா என்று paarppom


MADHAVAN
ஜன 05, 2024 10:47

நாலாயிரம் ரூபாய்க்கு ரூம் வாடகைக்கு எடுத்தா ஜிஎஸ்டி எட்நூறுரூபா கட்டுறான் அம்பதுலட்சம் வீட்டுக்கு வரிகட்டமுடியதா ?


Nagarajan Thamotharan
ஜன 05, 2024 09:24

ஊர் கோமாளியெல்லாம் சேர்ந்து ஒண்டி வந்த கோமாளியை தெருவுக்கு கொண்டுவந்த கதையாக இருக்கிறது தற்போதைய தமிழக வி டி யா ஆட்சி.....எந்த ஒரு திட்டத்தையும் முழுமையாக ஆராயாமல் செயலுக்கு கொண்டு வந்து விட்டு சட்டசபையில் அரசாணை நிறைவேற்றிவிட்டோம் அதற்க்கு ஆளுநர் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தேடி அலையும் திருட்டு திராவிட கூட்ட தமிழக வழக்கறிஜர்கள். தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு திருடர்கள் முன்னேற்ற கூட்டமும் கழுத விட்டையில் முன் பின் ஆகத்தான் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை