உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்பவே முடியலையே; என்கவுன்டர் சம்பவம் நாடகம் போல இருப்பதாக ஐகோர்ட் சந்தேகம்!

நம்பவே முடியலையே; என்கவுன்டர் சம்பவம் நாடகம் போல இருப்பதாக ஐகோர்ட் சந்தேகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தானே: மும்பையில் நர்சரி பள்ளி மாணவிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிக்கியவர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், நாடகம் போல் தெரிவதாக ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு தனியார் பள்ளியில் இரு பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து மாநிலம் முழுதும் போராட்டங்கள் வெடித்தன. பள்ளி துப்புரவு பணியாளர் அக்சய் ஷிண்டே என்பவரை கடந்த ஆக.17ம் தேதியன்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த ஆக.,1ம் தேதி அக்சய் ஷிண்டே பள்ளி கழிவறையில் வைத்து இரு மாணவிகளையும் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.சில தினங்களுக்கு முன், தலோஜா சிறையிலிருந்து விசாரணைக்காக அக்சய் ஷிண்டேயை போலீசார் வேனில் அழைத்துச்சென்றனர். அப்போது போலீசில் பிடியிலிருந்து தப்பியோட முயன்றதாகவும், அப்போது போலீசாரிடமிருந்த துப்பாக்கியை பறித்து சுட முயன்றதாகவும் கூறப்படுகிறது. தற்காப்புக்காக போலீஸ்காரர் சுட்டதில் அக்சய் ஷிண்டே உயிரிழந்தார்.இது தொடர்பாக, ஐகோர்ட் வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஒரு சாதாரண மனிதனரால் எப்படி போலீசாரை சுட முயற்சிக்க முடியும். இதை நம்புவது கடினமாக இருக்கிறது' என வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'தப்பியோட முயன்ற போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடகம் போல் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை தேவைப்படுகிறது.குற்றம் சாட்டப்பட்ட அக்சய் ஷிண்டேவை சிறையில் இருந்து வெளியே அழைத்து வந்தது முதல் சிவாஜி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தது வரை சி.சி.டி.வி., காட்சிகளை பாதுகாக்க வேண்டும்' என போலீசாருக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

மொட்டை தாசன்...
செப் 26, 2024 11:05

நாடகமா இருந்தாலும் என்ன தவறு ? இந்த வழக்கை குறைந்தது 15 வருடங்களுக்கு இழுத்து குற்றம் நிரூபிக்க படவில்லை அல்லது ஆதாரம் போதவில்லை என்று வழக்கை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக என்கவுண்டர் செய்தது எவ்வளவோ மேல். அரசாங்க பணமும் மிச்சம் குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தாகிவிட்டது. இந்த வழக்கில் போலீசாருக்கு நன்றி சொல்லவேண்டும் .


Sathyanarayanan Sathyasekaren
செப் 26, 2024 02:52

பலர் இங்கே என்சௌண்டேர் சரி என்று எழுதி உள்ளார்கள். அவர்களுக்கு இரு வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு பள்ளியின் கழிவறையில் ஒரு சிறுவன் இறந்து கிடந்தான். பள்ளியின் பஸ் கண்டக்டரை கைது செய்தார்கள். பின் மற்றோரு மாணவன்தான் பாலியல் துன்புறுத்தல் செய்து அந்த கொலையின் செய்ததாக CCTV காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டது. பல நேரங்களில் போலீஸ் கேஸ் முடிப்பதற்காக அப்பாவிகள் மீது பழிபோட்டு விட வாய்ப்புள்ளது.என்பதை மறுக்கமுடியாது .


தாமரை மலர்கிறது
செப் 25, 2024 21:37

இந்த மாதிரி நீதிபதிகளிடம் அந்த கேஸ் மாட்டி, வாய்தா மேல் வாய்தா வாங்கி கைதிகள் ஏதோ சுதந்திரத்திற்காக போராடியது போன்று கையை ஆட்டி கொண்டே போலீஸ் வேனில் ஏறி வீரவசனம் பேசுவார்கள். இந்த கொடுமையை பார்க்கவேண்டாம் என்று தான் நாடகம் நடத்தப்பட்டது.


Iniyan
செப் 25, 2024 18:16

அவர்களையும் இதே போல் செய்தால் இந்த மாதிரி பேச மாட்டார்கள்


திலக்
செப் 25, 2024 17:50

இந்தக் கேஸ் நீதிமன்றத்துக்கு வந்தா நாலஞ்சு சருஷம் கிடப்பில் போட்டு, இழுத்தடிச்சு ஆதாரம் இல்லேன்னு விடுதலை பண்ணிரலாம்னு பாத்தா.... வட போச்சே...


Narasimhan
செப் 25, 2024 17:43

தர்காலமாக மொள்ளமாரிக்கும் முடிச்சவிக்கியிருக்கும் சாதகமாக செயல்படுகிறார்கள்.


sugumar s
செப் 25, 2024 17:23

in india legal battle is very long. in case this fellow had been put on trial it would be going for years together. in the meantime, this fellow will be planning for many more things when he comes out or comes on bail. என்ன புத்தரா போயிட்டார் .


Lion Drsekar
செப் 25, 2024 17:14

உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று கூறுபவர்கள் மூன்று பிரிவாகப் பிரிக்கலாம், ஒன்று அரசு ஊழியர்களுக்கு பணி, பதவி உயர்வு, ஓய்வூதியம் கொடுக்கும் முழுநேர தவறாகவே வாழ்கை நடத்தும் ஒரு கூட்டம், மக்களுக்காக நாங்கள் , நாங்கள் இல்லையென்றால் இவ்வையகமே இயங்காது என்று கூக்குரலிடும் ஒரு கூட்டம், தன்னையும் , தான் யாரால் சம்பளம் பெறுகிறோம் என்பதையே மறந்து என்ன செய்தாலும் அவர்களுக்கு கைகட்டி, வாய்பொத்தி இயங்கும் ஒரு கோட்டம், நடுவில் பாவம் சிலருக்கு அவ்வப்போது சந்தேகம் வருகிறது, வாய்திறந்தால் இவர்களது பெயர் சரித்திரத்தில் இடம்பெற்று விடும் ஆகவே கருத்துக்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளவேண்டிய ஒரு நிலை, வந்தே மாதரம்


அஸ்வின்
செப் 25, 2024 17:05

காசுக்கு எதவேனா திங்கர வக்கீலுக இருக்க ரானுக அவன் புள்ளயும்


venugopal s
செப் 25, 2024 17:01

நதி மூலம், ரிஷி மூலம், என்கவுண்டர் மூலம் பார்க்கக் கூடாது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை