உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  120 கி.மீ., இலக்கை தாக்கும் பினாகா ஏவுகணைகளை வாங்குகிறது ராணுவம்

 120 கி.மீ., இலக்கை தாக்கும் பினாகா ஏவுகணைகளை வாங்குகிறது ராணுவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டின் நீண்ட துார தாக்குதல் திறனை வலுப்படுத்தும் விதமாக, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்படும் 120 கி.மீ., துார இலக்கை தாக்கும், மேம்படுத்தப்பட்ட 'பினாகா' ஏவுகணைகளை, 2,500 கோடி ரூபாய்க்கு வாங்க நம் ராணுவம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், நீண்ட துாரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் நம் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

முதல் சோதனை

நம் ஆயுதப்படை களுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப உபகரணங்களை, உள்நாட்டிலேயே டி.ஆர்.டி.ஓ., தயாரித்து வருகிறது. இந்த அமைப்பு, பினாகா ஏவுகணைகளையும் தயாரித்து வருகிறது. தற்போது, 40 - 75 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கு களை தாக்கும் பினாகா ஏவுகணைகளே உள்ளன. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட 120 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் பினாகா ஏவுகணைகளை, 2,500 கோடி ரூபாய்க்கு வாங்க நம் ராணுவம் முடிவு செய்துள்ளது. இவற்றை டி.ஆர்.டி.ஓ., தயாரிக்க உள்ளது. அடுத்த நிதியாண்டில் இந்த ஏவுகணைகளின் முதல் சோதனை நடக்கும் என்றும், ஏற்கனவே உள்ள ஏவுகணை அமைப்புகளுடன் இதை எளிதாக இணைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

வரவேற்பு

இந்த ஏவுகணைகளை வாங்க, ராணுவ கொள்முதல் கவுன்சில் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் தயாரிக்கப்படும் பினாகா ஏவுகணைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. ஏற்கனவே, தென்மேற்கு ஆசிய நாடான ஆர்மீனியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி