உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நமக்கு நாமே பாதுகாப்பு... ஜம்மு காஷ்மீர் மக்களை தயார் செய்யும் ராணுவம்!

நமக்கு நாமே பாதுகாப்பு... ஜம்மு காஷ்மீர் மக்களை தயார் செய்யும் ராணுவம்!

ஸ்ரீநகர்: தீவிரவாத தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள ஜம்மு காஷ்மீரில் கிராம மக்களுக்கு ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது.ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி வெடிக்காத சத்தம் இல்லாத நாளே இல்லை. தினமும் ஏதேனும் ஒரு பகுதியில் தீவிரவாதிகள்,ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடக்கும். தீவிரவாத ஒழிப்பில் ராணுவம் அதி தீவிர கண்காணிப்பில் இருந்தாலும் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் ஓயவில்லை.இந்நிலையில், தீவிரவாத தாக்குதல்களில் இருந்து மக்களைக் காக்க ஒரு புதிய திட்டத்தை ராணுவம் கொண்டு வந்துள்ளது. அதாவது உள்ளூர் போலீஸ், ஊர் மக்களுடன் இணைந்து கிராம பாதுகாப்பு படை ஒன்றை உருவாக்கி உள்ளது. இதில் மொத்தம் 600 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.600 பேருக்கும் தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்வது எப்படி? கிராமத்தை பாதுகாப்பது என்பது பற்றி பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் சிறியரக துப்பாக்கிகளை பயன்படுத்துவது, தீவிரவாதிகள் நுழைந்துவிட்டால் சாதுர்யமாக தப்பிப்பது உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகிறது.கிராம பாதுகாப்புப் படைக்கு மொத்தம் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் போலீஸ் வேண்டுகோளின்படி ராணுவம் இந்த புதிய முயற்சியை முன்னெடுத்து இருக்கிறது. இந்த பயிற்சியில் சேர்ந்து வெற்றிகரமாக முடித்த 500 பேர் ரஜௌரியிலும், தோடா, கிஷ்த்வார் பகுதியில் 90 பேரும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை