உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரசேவகர்கள் கைது : கர்நாடகாவில் பா.ஜ.வினர் கொந்தளிப்பு

கரசேவகர்கள் கைது : கர்நாடகாவில் பா.ஜ.வினர் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூர்: கர்நாடகாவில் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பா.ஜ.வைச் சேர்ந்த ராமர் கோயில் கரசேவகர்கள் இருவர் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இங்கு ராமர்கோயில் கட்ட வேண்டி நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து ராமர் கோயில் கட்டும் பணிகள் நிறைவடைந்து வரும் 22ம் தேதி திறப்பு விழா நடைபெற உள்ளது.இந்நிலையில் கர்நாடகாவில் பா.ஜ.வினர் இருவரை பழைய வழக்கு ஒன்றில் ஹூப்பாளி போலீசார் கைது செய்தனர். அவர்கள் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் கரசேவர்களாக இருந்தனர் என்பது தெரியவந்தது. 31 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.வினர் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.அவர்கள் இருவரும் 60 வயதை கடந்துவிட்டனர். இது அரசியல் பழிவாங்கும் நோக்கில் கர்நாடகா காங்கிரஸ் அரசு செயல்படுவதாக புகார் கூறியுள்ளனர்.இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கூறியது கைது செய்யப்பட்ட இருவர் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகி உள்ளார்கள். கலவர வழக்கில் பல ஆண்டுகளாக சிக்காமல் இருந்தனர். நீதிமன்ற விசாரணைகளிலும் அவர்கள் ஆஜராவில்லை. நீதிமன்றத்தால் கிடப்பில் உள்ள வழக்குகளாக கருதப்படுபவை.' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Shekar
ஜன 03, 2024 10:22

சிறுபான்மை காவலர்கள் என்று பெரும்பான்மை எதிப்பை சம்பாரித்து பிஜேபிக்கு கொத்து கொத்தாய் வோட்டை சேர்க்கிறார்கள்.


வாய்மையே வெல்லும்
ஜன 03, 2024 09:51

கூடிய விரைவில் கர்நாடகத்தில் கோணங்கி செத்த ராமையா வின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்திப்போம் .. நாட்டின் துரோகிகள் களையெடுக்க வேண்டிய நேரம் .. எல்லா திரூட்டுப்பயல்களையும் தோலுரிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..


Dharmavaan
ஜன 03, 2024 08:01

திமுக பாணியில் பழி வாங்கல் அங்கும் நாத்திக அரசு


Dharmavaan
ஜன 03, 2024 08:00

thimuka paaniyil


Ramesh Sargam
ஜன 03, 2024 07:39

கரசேவகர்கள் மீது ஏன் இந்த காங்கிரஸ் அரசுக்கு கோபம்?


Kasimani Baskaran
ஜன 03, 2024 05:29

மாடலை காப்பியடிக்கிறார்கள்...


ராஜா
ஜன 03, 2024 05:03

கிரிமினல் வழக்குகள் இருந்தால் கைது செய்து விசாரிப்பது தவறு இல்லை. அது போல் எந்த மதத்தினர், ஜாதியினர் என்று இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல் கைது செய்யப்பட வேண்டும். கர்நாடக து.முதல்வர் மீது தான் இந்தியாவிலேயே அதிக கிரிமினல் வழக்குகள் உள்ளது. அவரை எப்போது அவர்கள் காவல்துறை கைது செய்து சட்டத்தை காப்பாற்ற போகிறது?


Sankar Ramu
ஜன 03, 2024 00:44

நம்பிட்டோம். இங்க தமிழகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவனுக்கு பதவி உயர்வு.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ