உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலுடன் போராடியதற்காக வருத்தப்படுகிறேன்: அன்னா ஹசாரே

கெஜ்ரிவாலுடன் போராடியதற்காக வருத்தப்படுகிறேன்: அன்னா ஹசாரே

புதுடில்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து மதுவுக்கு எதிராக போராடியதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.கடந்த 2011ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இயக்கத்தில் இணைந்து ஹசாரேயின் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா கொண்டு வரவேண்டும் என நாட்டின் முக்கிய பிரச்னைகளை வைத்து ஹசாரே டில்லியில் நடத்திய போராட்டம் பெரும் ஆதரவை பெற்றது.ஹசாரேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிராக அரசியல் கட்சி துவக்குவதாக அறிவித்தார், அரசியல் கட்சி வேண்டாம் என அவர் கெஜ்ரிவாலை எச்சரித்தார். ஆனாலும் 2012ல் ஆம்ஆத்மி கட்சியை உருவாக்கினார். டில்லியில் 3முறை முதல்வரானார் கெஜ்ரிவால். தற்போது புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை நேற்று (மார்ச் 21) அமலாக்கத்துறை கைது செய்தது.

கெஜ்ரிவாலின் குரு

கெஜ்ரிவாலின் குருவான அன்னா ஹசாரே வெளியிட்ட வீடியோவில், கூறியிருப்பதாவது:''மதுபான கொள்கைகளை வகுத்து வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து மதுவுக்கு எதிராக போராடியதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரின் கைதுக்கு அவரே தான் காரணம்''மதுவுக்கு எதிராக போராடியவர் மதுபான கொள்கை முறைகேட்டில் சிக்கியுள்ளார். இவ்வாறு ஹசாரே தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Alexander
மார் 22, 2024 23:26

Most corrupted and biased is Anna Hazare


Ashok
மார் 22, 2024 22:01

Kejrival - Forgeryval


kulandai kannan
மார் 22, 2024 19:36

Slipper shot to Kejriwal


Jai
மார் 22, 2024 18:41

மூன்று முறை CM ஆக இருந்து, இரண்டு முறை PM ஆக இருந்து ஊழல் குற்றச்சாட்டுகளை இல்லாமல் இருக்கும் ஒரு மனிதரை அண்ணாந்து பார்க்கிறேன்.


Venkat
மார் 22, 2024 18:11

after 8 years this old guy is showing his head out


SPugazh
மார் 22, 2024 17:45

வெட்கப்படுகிறேன் என்று சொல்லியிருக்கவேண்டும்.இவரை விட்டு பிரிந்து தனியாக கட்சி தொடங்கியபோதே இவரது லட்சணம் தெரிந்திருக்கவேண்டாமா?


krishnamurthy
மார் 22, 2024 17:37

kalam kadantha gnanam


Barakat Ali
மார் 22, 2024 17:35

இருபத்தொண்ணாம் பக்கத்துக்காரனுக்காக ஈவேரா வருத்தப்பட்ட மாதிரியா ??


DVRR
மார் 22, 2024 16:26

அதுக்கு இவ்வளவு நாள் ஆச்சா குழந்தாய்


Muralidharan S
மார் 22, 2024 15:20

Kejariwal is an opportunistic fellow and a cunning fox, who used / mis-used Anna Hazare to grab the power and position Ultimately the whole voters get cheat including Anna Hazare


மேலும் செய்திகள்