உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலுக்கு இன்று இடைக்கால ஜாமின் கிடைக்கவில்லை

கெஜ்ரிவாலுக்கு இன்று இடைக்கால ஜாமின் கிடைக்கவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்று இடைக்கால ஜாமின் கிடைக்கவில்லை. இந்த வழக்கை நாளை மறுநாள் ( மே 9)அல்லது அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்த அமர்வு விசாரணை செய்த போது, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய விரும்புவதாக தெரிவித்தது.இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், அரசியல் தலைவர் என்பதால், பிரசாரம் செய்ய வேண்டி உள்ளது. இதனால், அவருக்கு இடைக்கால ஜாமின் குறித்த வாதங்களை கேட்போம். கெஜ்ரிவால் முதல்வராக உள்ளதால், தற்போது அசாதாரண சூழ்நிலை உள்ளது. இதனால், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது என தெரிவித்தனர்.

அமலாக்கத்துறை எதிர்ப்பு

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அரசியல்வாதிகளுக்கு என தனி விதிகளை உருவாக்கக்கூடாது என்றார். மேலும் அவர், கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகவில்லை. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் அவர் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார். கெஜ்ரிவால் எதுவும் செய்யவில்லை. ஆனால், தேர்தலுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் என்ற கதையை வெற்றிகரமாக மக்களிடையே கட்டமைத்துள்ளனர். எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் ஜாமின் வழங்கக்கூடாது எனவும் கூறினார்.நீதிபதிகள் கூறுகையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கினால், அவர் முதல்வர் பணி செய்வதை நாங்கள் விரும்ப மாட்டோம். அப்படி நீங்கள் செய்தீர்கள் என்றால், குழப்பம் ஏற்படும். அதனை நாங்கள் விரும்பவில்லை என்றனர்.அதற்கு கெஜ்ரிவால் தரப்பில், இடைக்கால ஜாமின் வழங்கினால், மதுபானக் கொள்கை குறித்த எந்த ஆவணத்தையும் கெஜ்ரிவால் கையாள மாட்டார் என விளக்கம் அளிக்கப்பட்டது.

காவல் நீட்டிப்பு

இதனிடையே, மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20 வரை நீட்டித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

மோகனசுந்தரம்
மே 08, 2024 06:25

இந்த தேச துரோகி அயோக்கியனை சும்மா விடக்கூடாது.


தாமரை மலர்கிறது
மே 07, 2024 22:53

ஊழல் முதல்வர்கள் கெஜ்ரி மற்றும் சோரன் சார்பாக அவர்களின் மனைவிகள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள் ஊழலுக்கு உடந்தையாக இருந்த குற்றம் மனைவியையும் சாரும் அதனால் மனைவிகளையும் பிடித்து சிறையில் போடுவது நல்லது கோர்ட் அவர்களை வெளியே விட்டு பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது


Ramesh Sargam
மே 07, 2024 20:32

ஊழல் செய்தவர்களுக்கு ஜாமீன் என்றுமே கிடைக்கக்கூடாது சிறையிலேயே அவர்கள் வாழ்க்கை கழியவேண்டும்


குமரி குருவி
மே 07, 2024 20:17

கிடைக்கிற மாதிரி இருக்கும் ஆனா கிடைக்காது.


தாமரை மலர்கிறது
மே 07, 2024 19:04

கெஜ்ரிக்கு ஜாமீன் கிடைத்தால், உலகில் உள்ள எவ்வளவு பெரிய கிரிமினலுக்கும் ஜாமீன் கொடுத்ததை விட மோசமான செயலாக மாறிவிடும் என்று நீதியரசரே யோசிக்கிறார் அதனால் தான் ஜாமீனை ஒத்திவைத்து விட்டார் தேர்தல் முடியும் வரை, மக்களை முட்டாள்தனமாக திசைதிருப்பாமல் இருக்க, கெஜ்ரிக்கு நீதிபதி ஜாமீன் கொடுக்கவாய்ப்பில்லை


M Ramachandran
மே 07, 2024 18:52

திருடன் ஓவ்வொருமுறையும் அகப்பட்டவுடன் அடுத்த முறை திருட மாட்டேன் என்று நீதிபதிக்கு முன்பு உறுதி கூறுவான் வெளியில் வந்தவுடன் அவனுடைய கை பழக்கம் திருடத்தான் செய்வான்


Indhuindian
மே 07, 2024 18:20

வோட்டு போட மட்டும் ஒரு ஒரு மணி நேரம் காவலாளிகளோட வெளியிலிலே விடுங்க எஜமான்


spr
மே 07, 2024 17:21

"அரசியல்வாதிகளுக்கு என தனி விதிகளை உருவாக்கக்கூடாது" இந்த கருத்து பாராட்டற்குரியது என்றாலும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்காது ஆனால் இறுதிவரை அவர் தனது முதலமைச்சர் பதவியை வீட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது


J.V. Iyer
மே 07, 2024 16:40

என்கவுண்டரில் போட்டாலும் ஆச்சர்யமில்லை


karthik
மே 07, 2024 16:22

மிகவும் ஆபத்தான அரசியல்வாதி இந்த கெஜ்ரிவால்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை