உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அச்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்: பா.ஜ., விமர்சனம்

அச்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்: பா.ஜ., விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த விரும்புவதால் அரவிந்த் கெஜ்ரிவால் அச்சமடைந்துள்ளார்'' என பா.ஜ., செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து கவுரவ் பாட்டியா கூறியதாவது: அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்காவது முறையாக சம்மன் அனுப்பி அவரை விசாரிக்க விரும்பியது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் பயந்து போனது ஏன்?. அவர் அச்சமடைந்துள்ளார். சிறையில் இருக்கும் குற்றவாளி யார் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்.பி., சஞ்சய் சிங்கிற்கு அடுத்து கெஜ்ரிவால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். கெஜ்ரிவாலின் டி.என்.ஏ.,வில் அராஜக குணம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

குற்றச்சாட்டு

இதற்கிடையே, ‛‛ அமலாக்கத்துறை எனக்கு நான்காவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன் ஏன் திடீரென எனக்கு சம்மன் அனுப்புகிறார்கள்?. நான் பிரசாரம் செய்வதை தடுப்பதே அவர்களின் நோக்கம்'' என கெஜ்ரிவால் நிருபர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Easwar Kamal
ஜன 18, 2024 21:55

இப்படி பிஜேபி தங்களை எதிர்க்கின்ற கட்சி இல்லாமல் ஆக்கி காணாமல் விடுவது உண்மையான ஜனநாயகம் இல்லை. இதுதான் பின்னாளில் சர்வாதிகார ஆட்சிக்கு வலி வகுக்கும். தவறு எல்லா கட்சியும் செய்யும் பிஜேபி என்ன செய்யாமலா இருக்கும். எதிர் கட்சி வலிமையாக இருந்தால் தான் ஒரு கட்சி சிறந்து விளங்கும்.


MARUTHU PANDIAR
ஜன 18, 2024 21:19

இந்த க்ரிப்ட்டோ ஒரு மோசக்காரன், நம்பிக்கை துரோகி அப்படீன்னு பேசிக்கறாங்க.+++இவர் தொடக்க காலத்தில் அரசியலில் கட்சி ஆரம்பித்து மக்களை சந்திப்பதற்கு முன் தனது நண்பர்களுடன் மக்களை நோக்கி பேசுவது போல ஒரு செட்டப் வீடியோ தயாரித்த போது சிரிப்பு தாங்க முடிய வில்லை ஒவ்வொரு முறையும் பொய்யாக தனது முகத்தை சீரியஸாகவும், கவலையுடனும் இருப்பது போல மாற்றிக் கொண்டு ,ஒவ்வொரு டேக்கிலும் நடிக்க வேண்டியிருக்கேன்னு குலுங்கி குலுங்கி ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க.++ அதெல்லாம் சமூக மீடியாவில் வந்தாச்சு+++சொல்லவே வேண்டாம் இவர் ஒரு பக்கா பிராடுன்னு. பேசிக்கறாங்க.


sankaranarayanan
ஜன 18, 2024 21:03

வாலை ஒட்ட நறுக்கிவிட்டால் கெஜ்ரி எகிறி எகிறி போகமுடியாது என்பதுதான் அமலாக்க துறையின் எண்ணம்


Pandi Muni
ஜன 18, 2024 20:20

புள்ளி கூட்டணியில நல்லவனுமா இருப்பான்?


Subbu
ஜன 18, 2024 19:42

Kejriwal is bloofing master. He will only bloof. If he clean why he is not going to meet ED?


Narayanan Krishnamurthy
ஜன 18, 2024 17:09

000


ayen
ஜன 18, 2024 16:37

நான் குற்றம் செய்யவில்லை என்று நிருபிக்க ஒரு நாள் போதும். நிருபித்துவிட்டு தேர்த்திருவிழா தாராளமாக செல்லலாமே.


Ramesh Sargam
ஜன 19, 2024 00:29

ஆனால், கெஜ்ரி கேட்கிறான், நான் மட்டுமா குற்றம் செய்துள்ளேன் என்று?


மேலும் செய்திகள்