உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக கபடி வீராங்கனைகள் மீது சரமாரி தாக்குதல்; பஞ்சாபில் அதிர்ச்சி

தமிழக கபடி வீராங்கனைகள் மீது சரமாரி தாக்குதல்; பஞ்சாபில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாபில் நடந்த பல்கலைகளுக்கு இடையிலான கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல்கலைகளுக்கு இடையிலான கபடி போட்டி பஞ்சாப்பில் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பாரதியார் பல்கலை, அன்னை தெரசா பல்கலை மற்றும் அழகப்பா பல்கலையைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b2qnrc88&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று அன்னை தெரசா பல்கலைக்கும், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கும் இடையே போட்டி நடைபெற்றது. அப்போது, பவுல் பிளே குறித்து இரு அணி வீராங்கனைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடுவரிடம் புகார் அளித்த தமிழக வீராங்கனையை பீகார் வீராங்கனை தாக்கியுள்ளார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இரு அணியினரும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். பீகார் வீராங்கனைகள் அங்கிருந்து நாற்காலிகளை எடுத்து தமிழக வீராங்கனைகள் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக வீராங்கனைகள் படுகாயம் அடைந்தனர். மேலும், தமிழக அணியின் பயிற்சியாளரை போலீசார் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் மேக்நாத் ரெட்டி கூறுகையில், 'இந்த சம்பவம் குறித்து பஞ்சாபில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு பேசினேன். பயிற்சியாளர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை கைது ஏதும் செய்யவில்லை. தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்,'' என்றார்.

கண்டனம்

இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், பா.ம.க., தலைவர் அன்புமணி , நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

உறுதி

இச்சம்பவம் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது: பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் அனைவருமே பாதுகாப்பாக உள்ளனர். யாரும் அச்சப்பட வேண்டாம். வதந்திகளை பரப்ப வேண்டாம். இனிமேல் வெளி மாநிலங்களுக்கு விளையாடச் செல்லும் தமிழக வீராங்கனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் எனக்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Laddoo
ஜன 25, 2025 22:27

அடுத்த பிளைட்ட பிடிச்சு ராசாவும் கனியும் போய் காப்பாத்துங்க.


Ganapathy
ஜன 25, 2025 01:46

உடனே இதுக்கும் பார்பனர் பாஜக மோதி ஆர்எஸ்எஸ் ஸனாதனம் தான் காரணம்னு உளறிகிட்டு மைனர் தத்தி கிளம்புவான்யா.


ManiK
ஜன 24, 2025 21:50

உதார்நிதி தான் எங்க sports ministerனு சோல்லிருபானுஙக... அதுதான் அடி பலமா பட்ருக்கும்


Ganapathy
ஜன 24, 2025 20:12

அடடே பானிபூராவாயன்கள் பின்னிட்டானுங்களே...எத்தனை தடவை திருட்டுத் திராவிடிய களவாணிகழக மொக்க பயலுக பீஹாரிகளை நக்கல் கிண்டல் செஞ்சிருப்பானுங்க...அதான் கிடச்ச சான்ஸ பண்ணாம கிடச்ச ஆளுங்களை போட்டு தாக்கிபுட்டாங்கய்யா...தாக்கிபுட்டாங்க....


Sundaran
ஜன 24, 2025 20:03

தாக்குதல் நடந்தது பஞ்சாபில் .நீ பிஜேபி யை குறை கூறுகிறாய் .உடன்பிறப்பு அத்தனையும் ஞான சூனியம் தான் போல


Vijay D Ratnam
ஜன 24, 2025 18:09

பஞ்சாப் கபடி வீராங்கனைகள் தமிழ்நாட்டுக்கு விளையாட வரும்போது பதிலடி கொடுக்க கூடாது.


Barakat Ali
ஜன 24, 2025 17:42

வடக்கன்ஸ் என்று இகழ்ச்சியாக தமிழகத்தில் பேசுவதோடு அடக்கமாக இருத்தல் நன்று ... வெறுப்புணர்வை கும்மிடிப்பூண்டி தாண்டினால் காட்டுவது நமக்கே பேராபத்து .....


raja
ஜன 24, 2025 17:41

என்ன செய்ய போகின்றனர் தத்தி சின்னவரும் கோமாளி துக்ளக்கும்


என்றும் இந்தியன்
ஜன 24, 2025 17:09

அதெல்லாம் லல்லு பிரசாத் வாழ்க கோஷ்டியாக இருக்கும்


chandrasekar
ஜன 24, 2025 16:48

ஊர் எதுன்னு பாக்காம கூட பதிவு போடுறீங்களே... அந்த அளவிற்கு உங்கள் மறைத்திருக்கிறது பா.ஜ., எதிர்ப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை