உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதுக்கு முடிவே கிடையாதா ஆபீஸர்; தினமும் நடக்குது ரயில் கவிழ்ப்பு சதி: மஹாராஷ்டிராவில் திக்...திக்...

இதுக்கு முடிவே கிடையாதா ஆபீஸர்; தினமும் நடக்குது ரயில் கவிழ்ப்பு சதி: மஹாராஷ்டிராவில் திக்...திக்...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவின் சோலாப்பூரில் இன்று(செப்.,11) ரயில் தண்டவாளத்தில் பெரிய சிமென்ட் தடுப்பு வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க சதி நடத்தப்பட்டது. டிரைவரின் எச்சரிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு, உ.பி.,யின் பிரயாக்ராஜில் இருந்து ஹரியானாவின் பிவானிக்கு, காலிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் இரவு, வேகமாக சென்று கொண்டுஇருந்தது. கான்பூருக்கு அருகே, சிவ்ராஜ்பூர் என்ற இடத்திற்கு வந்த போது, தண்டவாளத்தில் சில பொருட்கள் இருப்பதை ரயில் டிரைவர் பார்த்தார்; உடனே அவர், ரயிலை, 'சடன் பிரேக்' போட்டு நிறுத்த முயன்றார். எனினும், தண்டவாளத்தில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் மீது ரயில் இன்ஜின் மோதியது. இதில் காஸ் சிலிண்டர் துாக்கி வீசப்பட்டது. சிலிண்டர் வெடிக்காததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேபோல், ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் ரயில் வழித்தடத்தில் இரண்டு சிமென்ட் ஸ்லாப்களை வைத்து, சரக்கு ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது. அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நேற்று (செப்.,10) மத்திய பிரதேசம்!

மத்தியபிரதேச மாநிலத்தில் ஜபல்பூர்-இட்டார்சி ரயில் வழித்தடத்தில் குராம்கேடி என்ற பகுதியில் தண்டவாளத்தில் டிராக்டர் நிறுத்தப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ச்சி அடைந்த டிரைவர், உடனடியாக சுதாரித்து பிரேக்கை இயக்கினார். இதன் காரணமாக டிராக்டர் மீது மோதாமல் ரயில் அங்கேயே நின்றது. டிரைவரின் சமயோசிதம் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இன்று (செப்.,11) மஹாராஷ்டிரா!

மஹாராஷ்டிராவின் சோலாப்பூரில் இன்று(செப்.,11) ரயில் தண்டவாளத்தில் பெரிய சிமென்ட் தடுப்பு வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க சதி நடத்தப்பட்டது. லோகோ பைலட்டின் எச்சரிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ரயில்வேயின் மூத்த பிரிவு பொறியாளர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று தினங்களாக சரக்கு ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் நடந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் ரயில் கவிழ்க்கும் முயற்சி அதிகரித்து வருவதாக ரயில்வே நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

venugopal s
செப் 11, 2024 18:01

எண்பது சதவீதம் மக்கள் ஆட்சி அதிகாரம் ராணுவம் எல்லாவற்றையும் கையில் வைத்துக் கொண்டு இருபது சதவீத மக்களை கட்டுப்படுத்த முடியாமல் குறை சொல்லிக்கொண்டே இருப்பது அவர்களின் திறமையின்மையைத் தான் காட்டுகிறது!


shakti
செப் 11, 2024 14:14

ரயில் மார்க்கமும் அமைதி மார்க்கமும்


Nandakumar Naidu.
செப் 11, 2024 12:06

இது தேசம் மற்றும் சமூக ஊறுகதிகளின் செயல். அவர்களே அடையாளம் கண்டு கைகால்களை முறித்து பிச்சை எடுக்க வைக்க வேண்டும்.


சமூக நல விரும்பி
செப் 11, 2024 12:05

மைலே மைலே என்றால் இறகு போடாது. அரபு நாடுகளில் இருப்பது போல ஆன் தி ஸ்பாட் தண்டனை கொடுத்தால் தான் இந்த கயவர்களின் கொட்டத்தை அடக்க முடியும்


Jay
செப் 11, 2024 11:35

எந்த மதமாக இருந்தாலும், எந்த ஜாதியாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் எந்தக் கட்சியினராக இருந்தாலும் அவர்கள் நம் மக்கள், அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இங்கு செயல்படுத்தப்படுவதில்லை. அப்படி ஒரு எண்ணம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் மக்கள் அனைவரையும் நாடு என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டும். இப்படை மக்களை ஒன்றிணைப்பதில் எதிர்ப்பாக இருப்பது மாநில கட்சிகள், வெளிநாட்டு மதங்களைப் பின்பற்றும் சிறுபான்மையினர், நக்சலைட்டுகள் தான்காரணம். நாட்டிற்கு நல்லது நினைப்பவர்களை சங்கிகள் என்று தமிழ்நாட்டில் கேவலப்படுத்துவது வருத்தத்திற்குரியது. ஏதோ ஒரு வெளிநாட்டில் தங்கள் மதத்தை பின்பற்றுபவர்களை தங்களுடைய சொந்தம் என்று நினைப்பதும் வாழ்நாள் முழுவதும் பக்கத்து வீட்டில் இருக்கும் வேற்று மதத்தினரை எதிரிகளாக பார்க்கும் மனப்பான்மை மாற வேண்டும். நமக்காக செயல்படும் ரயில் துறையையும் காவல்துறையையும் எதிரிகளாக பார்த்து அதை சேதப்படுத்தும் நக்சலைட்டுகள் மனப்பான்மை மாறவேண்டும்


Velan Iyengaar
செப் 11, 2024 16:20

அப்போ சங்கிகள் மதவெறியை ஹா ஹா ஹா தூண்டும் விதத்தில் ..மதவெறுப்பை ஹா ஹா ஊக்குவிக்கும் விதத்தில் ஒருபோதும் நடந்துகொள்வதே ஹா ஹா ஹா இல்லை என்கிறீர் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா


கல்யாணராமன்
செப் 11, 2024 11:08

நாச வேலை மற்றும் தேச விரோத செயல்களை விசாரிக்க ராணுவ வீரர்களை பயன்படுத்தி ராணுவ கோர்ட் மூலம் உடனடி தண்டனை வழங்க வேண்டும். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இதை விசாரணை செய்தால் 20 வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.


Ganapathy
செப் 11, 2024 11:05

நவீன தொழில்நுட்பமும் கடும் தண்டனையும் ராணுவ கோர்ட் விசாரணையும் தேவை.


Ganapathy
செப் 11, 2024 11:03

காந்தி குடும்பத்திற்கு மோதியின்மீது இருக்கும் ஆணவம் நிறைந்த கோபம்மும் காங்கிரஸ் எவ்வளவோ முயன்றும் இன்றுவரை ஆட்சியை கவிழ்க்க முடியவில்லையே என்ற கோபம் நிறைந்த ஆதங்கமும் வக்ஃப் சட்டம் புகைப்பழக்கம் என்ற கோபமும் எல்லாமும் தான் காரணம் தினமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க மக்கள்மனதில் அதைப்பற்றிய கெட்ட பெயர் உருவாக்க இது காங்கிரஸ் செய்யும் அய்யோக்கியத்தன்ம்


Velan Iyengaar
செப் 11, 2024 10:45

இங்க கூட ராமராஜ்யம் தான் .... எப்படியோ என்னவோ செய்து ராமராஜ்யம் நடத்துவதாக தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ....சட்டம் ஒழுங்கு அப்படி பேணிக்காக்கிறார்களாம் .....திருஷ்டி சுற்றி போடவேண்டும் ... பாட்னவிஸ்ஸுக்கு தாங்க .... அவரு தானே எப்படியோ என்னவோ செய்து ராஜ்ஜியம் நடத்துகிறார் ??


Ganapathy
செப் 11, 2024 11:44

உங்க ஆட்சீல தினமும் நடக்கும் கூட்டுக் கற்பழிப்பு கொலைகள்...கல்வி மந்தியோட டிரைவரு செஞ்ச கூட்டுக் கற்பழிப்பு வெளிய தெரியாம இருக்கத்தானே மஹாவிஷ்ணுவோட கைது... முணு வருசத்துல 5000 கொலைகள்...வெட்கமில்லாம கருத்து போட வந்துட்ட ..


Barakat Ali
செப் 11, 2024 10:42

ஏற்பாடு பண்ணின கும்பலின் தலைவன் இப்போ அமெரிக்காவுல பல்பு வாங்கிக்கிட்டு இருக்கான் .....


சமீபத்திய செய்தி