உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., வென்றால் மம்தா, ஸ்டாலின், உத்தவ், பினராயி சிறையில் அடைக்கப்படுவர்: கெஜ்ரிவால் பேட்டி

பா.ஜ., வென்றால் மம்தா, ஸ்டாலின், உத்தவ், பினராயி சிறையில் அடைக்கப்படுவர்: கெஜ்ரிவால் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ பா.ஜ., வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர்'' என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.

சாமி தரிசனம்

மதுபானக் கொள்கை வழக்கில், உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இன்று( மே 11) டில்லியின் கன்னாட் பகுதியில் உள்ள ஹனுமன் கோயிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7aimbour&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஹனுமன் ஆசி

இதன் பிறகு நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: நான் சிறையில் இருந்து நேரடியாக உங்களிடம் வந்துள்ளேன். 50 நாட்களுக்கு பிறகு உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி. சிறிது நேரத்திற்கு முன்னர், எனது மனைவி மற்றும் பஞ்சாப் முதல்வருடன் ஹனுமன் கோயிலுக்கு சென்றேன். கட்சிக்கும், நமக்கும் ஹனுமனின் ஆசி உள்ளது. அவரின் கருணையால் உங்கள் முன் நான் இருக்கிறேன்.

ஆம் ஆத்மியை அழிக்க முயற்சி

ஆம் ஆத்மி என்பது இரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்யக்கூடிய சிறிய கட்சி. ஆனால், நமது கட்சியை அழிப்பதற்கான எந்த வாய்ப்பையும் பிரதமர் தவறவிடவில்லை. தொடர்ச்சியாக நமது நான்கு தலைவர்களை சிறைக்கு அனுப்பி உள்ளார். நம்மை அழிக்க வேண்டும் என பிரதமர் எண்ணுகிறார். நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை ஆம் ஆத்மி தரும் என அவர் நம்புகிறார்.

துன்புறுத்தல்

கடந்த 75 ஆண்டுகளில் எந்த கட்சியும், நம்மை போன்று துன்புறுத்தலை சந்தித்தது இல்லை. ஊழலுக்கு எதிராக போராடுவதாக பிரதமர் சொல்கிறார். ஆனால், அனைத்து திருடர்களும் அவரது கட்சியில் தான் உள்ளனர். பா.ஜ., வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர்.

போராட்டம்

ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என பிரதமர் எண்ணினால், அவர் என்னிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும். டில்லியில் ஆட்சி அமைத்த பிறகு, எனது அமைச்சர்களில் ஒருவரை டிஸ்மிஸ் செய்து நான் சிறைக்கு அனுப்பினேன். பஞ்சாபில், அமைச்சர் ஒருவரை சிறைக்கு அனுப்பினோம்.என்னை கைது செய்ததன் மூலம் எந்த தலைவரையும் கைது செய்ய முடியும் என நினைக்கின்றனர். அவர்களின் இந்த இயக்கத்திற்கு ஒரே நாடு, ஒரே தலைவர் என பெயர் சூட்டி உள்ளனர். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 81 )

Ananth
மே 17, 2024 08:35

கெஜரிவால் மற்றும் பிஜேபி யின் எதிரணியில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் ஒரு கேள்வி? பொதுவாக தேர்தலில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்பவர்கள், நாங்கள் வெற்றி பெற்றால் இந்திய மக்களுக்கு இதையெல்லாம் செய்வோம், இப்படியெல்லாம் நடப்போம் என்று வாக்கு கேட்பார்கள் ஆனால் இம்முறை, எதிரணியில் உள்ள, நீங்களும், உங்கள் உறவினர்களும், நண்பர்களும் ஜெயிலுக்கு போகக்கூடாது எனில், எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என வெளிப்படையாக கூறி பிரச்சாரம் செய்கிறீர்கள் இது என்ன மாதிரியான ஜனநாயகம்? மக்களாகிய நாங்கள் ஓட்டு போடுவது நாட்டுக்கு என்ன நல்லது எல்லாம் நடக்கும் என்பதற்காகத்தான் எதிரணியின் ஒட்டு மொத்த பிரச்சாரத்தில் நாட்டு நலம் எங்கே உள்ளது?உங்கள்எதிரணியின் உள்ள நபர்களின் தனிப்பட்ட விஷயங்களுக்காக மக்கள் ஓட்டு போட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் இதை வெளிப்படையாகவும் சொல்கிறீர்கள் மக்களை முட்டாள்கள் என நினைக்கிறீர்கள் நிச்சயம் உங்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் வாழ்க பாரதம் வெல்க மக்கள்சக்தி


S Ramachandran
மே 14, 2024 18:24

கேஜ்ரிவால் கருத்தில் இருந்து என்ன தெரிகிறது என்றால் மம்தா ஸ்டாலின் உத்தவ் பினாரயி இவர்கள் எல்லாம் கொள்ளை அடித்து வைத்து இருக்கிறார்கள் என்று தான் தெரிகிறது


Kalyanaraman
மே 14, 2024 15:50

ஊழல் செய்தது நீதிமன்றத்தின் விசாரணையில் நிரூபிக்கப்பட்டால் அவரை யாராக இருந்தாலும் கைது செய்யாமல் பாராட்டு விழாவா நடத்துவார்கள்?


R.MURALIKRISHNAN
மே 14, 2024 15:24

அப்படியா, நல்ல விஷயம் அப்படியே ஆகட்டும்


Kumar Kumzi
மே 14, 2024 14:26

நீ குறிப்பிட்ட அனைவருமே ஊழல் குற்றவாளிகள் தான்


Nithya Ramachandran
மே 14, 2024 11:49

அப்படியா? இந்த அரசியல் வியாதிகளை உள்ள போடுவதாக இருந்தால் உடனே எல்லோரும் பிஜேபி க்கு வாக்களியுங்கள்


Neutrallite
மே 14, 2024 11:40

பாஸ் நீங்க தெரியாம பாஜகவுக்கு ஓட்டு கேக்குறீங்க :


samvijayv
மே 14, 2024 11:00

எப்படி நீங்களும் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றது போல் அவர்களும் ஊழல் செய்து உள்ளார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறீர்களே


kumarkv
மே 14, 2024 10:54

உன் பெயரை முதலில் சொல்லு


Sakthivel N
மே 14, 2024 10:12

நாட்டுக்கு நல்லது தானே அப்படியே ஆகட்டும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ