மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
குல்மார்க்: ஜம்மு - காஷ்மீரின் குல்மார்கில், பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் மீது பனிப்பாறை சரிந்ததில், ரஷ்ய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.ஜம்மு - காஷ்மீரின் குல்மார்கில் ஆறு ரஷ்ய வீரர்கள் பனிச்சறுக்கில் நேற்று ஈடுபட்டு இருந்தனர். கோங்துாரி என்ற இடத்தில் அவர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்டு இருந்தபோது நேற்று மதியம் 2:00 மணிக்கு பெரிய பனிப்பாறை சரிந்தது.இதில் ஆறு ரஷ்ய வீரர்கள் மற்றும் உள்ளூர் வழிகாட்டி ஒருவர் சிக்கினர். மீட்புப் படையினர் உடனடியாக வந்து ஏழு பேரையும் மீட்டு வெளியே எடுத்தனர். இதில், ரஷ்ய வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்ற ஆறு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதை தொடர்ந்து குல்மார்க் பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சுற்றுலா துறையின் பனிச்சறுக்கு ரோந்துக்குழு, உள்ளூர் போலீசார் மற்றும் ஹெலிகாப்டர் குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.குல்மார்கில், நேற்று முன் தினம் துவங்கி வரும் 25 வரை, 4வது கேலோ இந்திய குளிர்கால போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த பனிச்சரிவின் காரணமாக போட்டியில் பாதிப்பு இன்றி தொடர்ந்து நடக்கும் என்றும், விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஜம்மு - காஷ்மீர் விளையாட்டு கவுன்சில் செயலர் நுஸ்ஹாத் குல் நேற்று தெரிவித்தார்.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
5 hour(s) ago