உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / களை கட்டியது அயோத்தி: ராமர் கோயில் பிரமாண்டம்

களை கட்டியது அயோத்தி: ராமர் கோயில் பிரமாண்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் ஆவலுடன் எதி்ர்பார்த்துக் கொண்டு இருக்கும் அயோத்தி ராமர் ஜென்பூமியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேகத்துடன் வரும் 22-ல் திறக்கப்பட உள்ளது.கடந்த 2023 ஏப்ரலில் முதற்கட்டமாக தினமலர் குழு அயோத்தி பயணம் மேற்கொண்ட போது கோயில் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்திருந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவுற்று கோயில் திறக்க சில தினங்கள் இருப்பதால், இரண்டாம் கட்ட பணிகளை மேற்கொண்டு கோயில் கட்டுமான பணிகள் எவ்வளவு தூரம் நிறைவடைந்துள்ளது, கோயிலை சுற்றி என்னென்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை காட்டுவதே இந்த வீடியோ தொகுப்பு....https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w3bnq0pf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து விமானம் மூலம் அயோத்தி மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் மூலம் செல்ல முடியும். இதற்கு முன் லக்னோ சென்று சாலை வழியாக பைசைாபாத் சென்று தான் அயோத்தி செல்ல முடிந்தது. இப்பகுதிகளில் இருபுறம் உள்ள கடைகளில் ஷட்டர்களில் ராமர், அனுமன் தண்டம், கோதண்ட ஆயுதம், போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.ராமர் கோயிலில் ஸ்ரீராம குண்டம், அனுமன் மண்டபம், மகரிஷி வால்மீகி ஆராய்ச்சி மையம் என, மொத்தமாக 70 ஏக்கர் பரபரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 2.7 ஏக்கரில் 57,400 சதுரடியில் 161 அடி உயரத்தில் கோயில்அமைந்துள்ளது. இங்கு 6 சன்னதிகள் உள்ளன. இதில் மூலவர் சன்னதியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட உள்ளது. சிலைபீடத்தை சுற்றி ராஜஸ்தான் மார்பிள்களால் கருவறை கட்டப்பட்டு பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. கோயில் கட்டுமான பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மிகவும் பக்தியுடன் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்டர்லாக் சிஸ்டத்தின் மூலம் கட்டப்பட்டுள் கோயி்லில் கட்டுமான பணிகளுக்காக ராஜஸ்தானின் ஜெயப்பூரின் பன்சி பகர்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட பிங்க்ஸ்டோன் மார்பிளால் கட்டப்பட்டுள்ள தூண்கள் அதில் செதுக்கப்பட்டுள்ள கலை நுணுக்கத்துடன் கூடிய தெய்வங்களின் சிலைகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் ராமர் சீதை சிலைகள் செய்ய நேபாளில் இருந்து கொண்டு வரப்பட்ட இரு பெரிய கற்கள் இருந்தன. தற்போது அந்தகற்கள் இல்லை விசாரித்ததில் தற்போது ராமர் , சீதை சிலைகள் செய்ய பயன்படுத்தப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. கோயில் திறக்கும் போது தான் மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும். அதுவரை அனுமதியில்லை.

அன்னதானம்

கோயிலுக்கு செல்லும் பிரதான சாலைகளில் நிழற் குடைகள் கட்டப்பட்டுள்ளது. கோடை காலத்தின் போது ராமரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக தான் நிழற் குடைகள் கட்டப்பட்டுள்ளது.கோயில் திறக்கப்பட்ட பின் தினமும் லட்சக்கணக்கானோர் வருவர் என்பதால் ஆங்காங்கே உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.மேலும் ராம் ஜென்பூமி டிரஸ்ட் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தவிர ‛‛அம்மாவார் ராம்'' மந்திர் என்ற இடத்தில் வழங்கப்பட்டு வரும் அன்னதானம் மிகவும் தரமானதாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2019-ம் ஆணடு முதல் காலை 11 மணி முதல்3 மணி வரை தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்ததாகவும், இனி வரும் 15-ம் தேதி முதல் காலை 9 மணி முதல்இரவு 9 மணி வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள நிர்வாகி தெரிவிக்கிறார்.கோயிலுக்கு தினம் லட்சக்கணக்கான வாகனங்கள் வரும் என்பதால், மல்டி வாகன பார்க்கிங் சிஸ்டம் மூலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து நேரடியாக இந்த மல்டிலெவல் வாகன பார்க்கிங்கிற்குள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரயில் மூலம் அயோத்தி ரயில் நிலையம் வரலாம், இந்த ரயில் நிலையம் தற்போது ‛‛அயோத்தி தாம் ''ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோயில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ராமாயணத்தை விளக்கும் ராமரின் பிறப்பு, பட்டாபிஷேகம், வனவாசம், ராவணன் வதம் ஆகியவற்றை விளக்கும் சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இச்சிலைகளை பார்த்த உடன் நம் மனதில் ராமாயணத்தின் காட்சிகளை நேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும். தவிர ராமாயணத்தை விளக்கும் ஓவியங்களும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.

சூரிய ஸ்தம்பம்

அயோத்தியின் முக்கிய சாலைகளில் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள 30 அடி உயர சூரிய ஸ்தம்பம் 40 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது அவைரையும் கவர்ந்தது. இதில் ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய ஸ்தம்பத்தின் பின்னணி குறித்து விசாரி்த்த போது , இரு காரணங்கள் சொல்லப்படுகிறது.ஒன்று இந்த சூரிய ஸ்தம்பம் சோலார் சக்தியில் இயங்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று ராமர் சூரிய வம்சத்தில் பிறந்ததவர் என்பதால் அதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் பிரகாசமாக ஓளிரும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சராயு நதி

பின் சராயு நதிக்கரை சென்றால் அங்கு ஒளி ஒலிகாட்சியை ரசிக்கலாம், சமீபத்தில் அங்கு ராமாயணத்தின் கதையை விளக்கும்மெகா திரை அமைக்கப்பட்டு ராமாயண கதைகள் ஓளிபரப்பட்டு வருகிறது. ராமரை தரிசித்து வரும் பக்தர்கள் இந்நதிக்கரையில் குவிகின்றனர். மாலை சூரிய அஸ்தனமும் கண்டு ரசிக்கலாம்.ராமர் இறுதி கட்டத்தில் வைகுண்டம் செல்லும் கேட்வேயாக சராயு நதி இருந்தாக கூறப்படுகிறது. இங்கு வரும் மக்கள் விளக்கு ஏற்றி ராமரை வேண்டி வழிபாடு நடத்தி விளக்கை நதியில் மிதக்க விடுவர். தற்போது சராயு நதியில் கட்டண முறையில் படகு போக்குவரத்தும் நடக்கிறது.அயோத்தியை சுற்றியுள்ள கனெட் என்ற பகுதிகளில் ராமர் பட்டாபிஷேகம் நடந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தசரதன் மஹால், வால்மீகி மஹால் ஆகியனவும் உள்ளன. ஹனுமன் கோட்டை உள்ளது. இங்கு தான் முதலில் ஹனுமனை முதலில் தரிசித்த பின்னரே ராமரை வழிபடுவதை மக்கள் வழக்கமாக பின்பற்றி வருகி்ன்றனர்.அயோத்திக்கு தமிழகத்திலிருந்து வரும் பக்தர்கள் தங்கி செல்ல குறைந்த கட்டணத்தில் சத்திரம் உள்ளது. இங்கு உணவுடன் ரூ. 200 வாடகை வசூலிக்கின்றனர்.இந்தியாவின் ஒட்டு மொத்த பார்வையும் அயோத்தி நோக்கி திரும்பியுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு பின்னேர அனுமதிக்கப்படுகிறது.அயோத்தி வரும் பக்தர்கள் தங்களின் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், வாட்டர் பாட்டில் போன்ற பொருட்கள் எதுவும் கொண்டு வர அனுமதியில்லை. பாதுகாப்பு கருதி அவைகளை பத்திரமாக வைப்பதற்கான அனைத்து வசதிகளுடன் சேப்டி லாக்கர்கள் அறைகள் உள்ளன.கோயில் அமைப்பு சார்ந்த பொருட்களும் அங்கு விற்கப்படுகின்றன. இதனை தங்கள் வீட்டில் பூஜை அறையில் வைப்பதற்காக வாங்கிட மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வரும் 22-ம் தேதி பிரமாண்ட ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்தியாவில் மற்ற பிரதான கோயில்களை விட ராமர் ஜென்பூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலை காண அயோத்தி நோக்கி அதிகபடியான மக்கள் வருவர் என கணிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venkat venkatesh
ஜன 07, 2024 23:34

JAI SRI RAMMMMMMMMMMMM


venkatarathinam
ஜன 07, 2024 22:17

will Ayodhya overtake Tirupati


Sakthi Parthasarathy
ஜன 07, 2024 21:08

நல்ல விஷயம், கழிப்பறை வசதிகள், இது போன்ற இடங்களில் மக்களை ஏமாற்றி பிழைக்கும் சகதிகளை அப்புறப்படுத்தும் அமைப்புகள், சாதாரண மக்கள் வந்தால் அவர்கள் இலகுவாக அனைத்து இடங்களையும் பார்க்கும் வண்ணம் வழிகாட்டி குறியீடுகள், SOP போல standard praying procedures தெளிவாகவும் இலகுவாக புரியும் படியும் விளக்கப்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளதா என்பதையும் விளக்கவும்....தெற்கு வாசல், வடக்கு வாசல் என்று அலைக்கழிக்காமல் இனிமையான அனுபவமாக அனைவருக்கும் அமைய வாழ்த்துக்கள்


ராஜசேகர் வேடசந்தூர்
ஜன 07, 2024 17:40

தமிழ்நாட்டில் ~ திருடர்கள் ~ பொழுது விடியும் போது பீடி சிகரெட் குடிச்சி சாராய கடையில் நிப்பானுங்க ~ இது இவனுக டிசைன் ~ ~~பொழுது விடியும் போது ~~ கோவில் கடவுள் பக்தி ன்னு நிக்கிறது ~~ அவனுங்க டிசைன்~ திருடர்களை நல்லவர்களுடன் ஒப்பிடுவது தவறு


Srprd
ஜன 07, 2024 15:29

Sri Rama Jayam


J.Isaac
ஜன 07, 2024 13:41

மக்கள் நடத்தையில் செயலில் மாற்றம் வருமா ? Spirituality is Discern good things and attitude, demonstrate it to others and deny filty things. I think ,


hari
ஜன 08, 2024 11:21

Isaac.....are you talking about church and pastors, bishops ....


குமாரவேல் பெருந்துறை
ஜன 07, 2024 13:11

வட இந்திய மக்கள் அவங்க ரேஞ்சுக்கு கோவில் கட்டரங்க ~ இங்க திமுக உப்பிஸ் அவங்க ரேஞ்சுக்கு டாஸ்மாக் கடையை தான் திறபாங்க ~~ இது தான் திருடர்கள் முன்னேற்ற கழகம்


g.s,rajan
ஜன 07, 2024 11:06

In India No Solutions yet to be arrived for Many Important Problems ,the Ruling Government has Totally failed to attain the Solutions but Purpose fully Diverting the People towards Ayodhya Temple.


hari
ஜன 08, 2024 11:22

but Rajan appreciating tasmac in tamilnadu.... very good


r ravichandran
ஜன 07, 2024 10:18

55 ஆண்டு கால திராவிட மாடல் அரசுகள் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது இன்னும் பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் அரசை எதிர் பார்க்க வைத்து இருக்கும் அளவுக்கு தான் இந்த ஆட்சி உள்ளது.


sahayadhas
ஜன 07, 2024 10:10

கூட்ட நெரிசலில், லாரி மோதி பக்தர்கள் சாவு வராமல் பார்த் கோ ராமா.


hari
ஜன 08, 2024 11:29

சகாயதாஸ்..... ராமா னு சொல்லறாரு..... இவர்தான் அந்த லாரி டிரைவரோ....


மேலும் செய்திகள்









புதிய வீடியோ