உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடவுள் ராமர் குறித்த பாடல்: பிரதமர் உருக்கம்

கடவுள் ராமர் குறித்த பாடல்: பிரதமர் உருக்கம்

புதுடில்லி: கடவுள் ராமர் குறித்து ஸ்வாஸ்தி என்ற பெண் இயற்றி பாடியுள்ள பக்தி பாடலை கேட்டால், மனம் உணர்ச்சிகளாலும், கண்கள் கண்ணீராலும் நிறையும் என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, பல கலைஞர்கள் ராமர் குறித்து பாடல்களை பாடி ஆடியோ வெளியிட்டு வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5i17kwi4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், ஸ்வாஸ்தி மெஹூல் என்பவர், ‛ராம் ஆயங்கே' என்ற தலைப்பில் பாடல் ஒன்றை எழுதியும், பாடியும் வெளியிட்டுள்ளார். அந்த பாடலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.இந்த பாடலை ‛எக்ஸ்' வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, பாராட்டி கூறியுள்ளதாவது: ஒரு முறை ஸ்வாஸ்தியின் பாடலை கேட்டால், அது காதுகளில் நீண்ட நேரம் எதிரொலிக்கும். கண்கள் கண்ணீரிலும், மனம் உணர்ச்சிகளாலும் நிரம்பும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிறைகளில் நேரடி ஒளிபரப்பு

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலில், கும்பாபிஷேக நிகழ்ச்சியை உ.பி.,யில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் ஒளிபரப்பு செய்ய மாநில அரசு சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 07, 2024 08:03

சனாதனம் மட்டுமே நிலைத்து நிற்கும் ........


Ramesh Sargam
ஜன 07, 2024 00:52

இளைஞர்கள் இப்பொழுது பகவான் ராமரால் மிகவும் ஈர்க்கப்படுகிறார்கள். ஆக, இனிவரும் காலம் பொற்காலமாக ஆகும். எல்லா பெருமையும் பிரதமர் மோடிஜி அவர்களுக்கே. நாட்டை, குறிப்பாக இளைஞர்களை நல்வழிப்பாதையில் வழி நடத்தி செல்கிறார். ஜெய் ஸ்ரீ ராம்.


Seshan Thirumaliruncholai
ஜன 06, 2024 18:51

எல்லா வைணவ திருக்கோயில்கலில் இப்படித்தான்தமிழ் பாடல்களை/பிரபந்தங்களை சேவிக்கவேண்டும்/கூறவேண்டும் என்று இளைய பெருமாள் ராமானுஜர் நெறிமுறையை வகுத்துள்ளார். அதனை மீறமுடியாது/கூடாது. அயோத்தியில் கும்பாபிஷேகம் முடியும் வரை சாத்துமுறைக்கு முன் திருகோயில்கு வந்துள்ள எல்லாரும் ராம நாமத்தை ஏன் கூறக்கூடாது.? பெரியோர்கள் ஆச்சாரியர்கள் தீர்த்தக்காரர்கள் தீர்மானித்தால் செய்யமுடியும். பக்தியின் அங்கம் தான்


Pon Thankaraj
ஜன 06, 2024 16:57

0 ....


Niram Integrated Farm
ஜன 06, 2024 16:37

0 ...


NALAM VIRUMBI
ஜன 06, 2024 13:19

தர்மமே அவதாரமாக வந்ததுஎவராலும் உணர முடியும்.


Godyes
ஜன 06, 2024 13:16

இத்தகைய் தெய்வீக செயல்பாடுகளை செய்தே நம் முன்னோர் இந்திய நாட்டை அமைதியில் நடத்தி சனாதனத்தை ஆதரித்துள்ளனர்


Pon Thankaraj
ஜன 06, 2024 16:56

000


மேலும் செய்திகள்









புதிய வீடியோ