உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொது மன்னிப்பு கேளுங்கள்: புரி பீடாதிபதிக்கு துறவி பதிலடி

பொது மன்னிப்பு கேளுங்கள்: புரி பீடாதிபதிக்கு துறவி பதிலடி

மதுரா: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த புரி மடத்தின் பீடாதிபதி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி, மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என துறவி அதோக் ஷாஜானந்தா தியோ தீர்த் தெரிவித்துள்ளார்.

பெரும் சர்ச்சை

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா, வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதற்கு ஒடிசாவின் புரி பீடாதிபதி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.சமீபத்தில் இதுகுறித்து அவர் கூறுகையில், ''பிரதமர் மோடி, கடவுள் ராமர் சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்யும்போது நான் அங்கு நின்று கைகளை தட்டி கொண்டாட வேண்டுமா! இது நம் கலாசாரத்துக்கு எதிரானது. ''இதனால் நான் அங்கு செல்லப்போவது இல்லை. ராமர் சிலை பிரதிஷ்டையில் கண்ணியம் மீறப்படுவதை என்னால் பார்க்க முடியாது. நான் அந்நிகழ்வை பார்க்க விரும்பவில்லை,'' என்றார்.இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், துறவி அதோக் ஷாஜானந்த் தியோ தீர்த் கூறியதாவது:சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி தன் இழிவான பேச்சால், 140 கோடி இந்திய மக்களையும் அவமானப்படுத்தி உள்ளார். எனவே, அவர், பொதுமக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

கும்பாபிஷேகம்

உலகிலேயே மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் நம் பிரதமர் நரேந்திர மோடி. நம் பண்டைய கால வரலாற்றில், பழங்கால கோவில்களை கட்டமைத்த அரசர்களே, இதர நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதேபோல், நம் நாட்டு மக்களின் பிரதிநிதியாக, பிரதமர் மோடி உள்ளார். எனவே, அவர் முன்னின்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்வதே சரியானது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

Sekar
ஜன 10, 2024 17:20

ஏன் இந்தியாவின் முதல் குடிமகள் பிரதிஷ்டை செய்யட்டும்


vkpuram madhavan
ஜன 10, 2024 09:56

பிரதமர் மோடி அவர்கள் பிரதிஷ்டை செய்யட்டும். ஜனாதிபதி முர்மு அவர்கள் அபிஷேகம் செய்யட்டும். யார் போனாலும் போகட்டும், போக விரும்பாதவர்கள் விட்டுவிடட்டும். சமதர்மம் சமத்துவம் காக்கப்படவும் நிலைநிறுத்தப்படவும் வேண்டும்.


Velan Iyengaar
ஜன 08, 2024 22:28

மிக தீர்க்கமாக என்னுடைய பல கருத்துக்களை பிரசுரிக்காமல் விட்டிருக்கிறார்கள்...அதிலும்... மோடி பிம்பம் பெரிதா.. இல்லை சனாதனம் பெரிதா என்ற கேள்வி கேட்டேன்... அதை கடைசிவரை பிரசுரிக்காமல் தவிர்த்திருக்கிறார்கள்.... எனக்கு பெரும் மகிழ்ச்சி தருவது அந்த கேடுகெட்ட மோடி பிம்பத்திடமே சனாதனம் அப்பட்டமாக தோல்வி அடைந்துள்ளது....ஒரு நல்ல விஷயத்திடம் சனாதனம் தோல்வி அடைந்திருந்தால் சநதவாதிகள் கொஞ்சம் மனா இளைப்பாறி இருப்பார்கள்.. ஒரு கேடுகெட்ட அதுவும்.. இவர்களால் கட்டியமைக்கப்பட்ட ஒரு போலி பிம்பத்திடம் இந்த சனாதனம் தோல்வி அடைந்தது..... அது எப்படிப்பட்ட அவலம் மற்றும் கேடு ?? சனாதனத்தின் அடிமட்ட்ட வீழ்ச்சி இது இனி இதில் இருந்து மீண்டு வர சனாதனத்தால் இயலவே இயலாதுசனாதனத்துக்கு சனாதனத்தை போற்றி காப்பற்ற முயலும் கீழ்நிலை ஜென்மங்களுக்கு இது மரண அடி இவர்கள் போற்றி பாதுகாக்க நினைக்கும் கற்பனை ராமாயண இதிகாச தலைவனுக்கு செய்யப்படும் உச்சபட்ச மரியாதையை இந்த சாணாதவாதிகள் கையை விட்டு பறிக்கப்பட்ட .....அவமரியாதை கொடுமையில் இருந்து மீள இந்த ஜென்மங்களுக்கு முடியவே முடியாது... இது தான் சந்தான சவப்பெட்டிக்கு கிடைத்த கடைசி ஆணி இவர்கள் இவர்கள் கையாலே இவர்களுக்கு ஆணி அடித்துக்கொண்டு நிகழ்வு தன அயோத்தி ராமர் சிலை ப்ரதிஷ்ட்டை கடவுள் எல்லோருக்கும் இருக்குராண்டா குமாரு மொமெண்ட்


தாமரை மலர்கிறது
ஜன 08, 2024 20:30

ஒரே மதத்திற்குள் சச்சரவு தேவை இல்லை. அவரவர் கொள்கை. அவரவர் விருப்பம்.


mrsethuraman
ஜன 08, 2024 19:07

ராமர் அரக்க வசம்த்தில் இருந்து வந்த விபீஷணன் ,குரங்கு வம்சத்திலிருந்து வந்த ஹனுமான் ,படகோட்டி குகன் ,சபரி மற்றும் பறவை இனத்தை சேர்ந்த ஜடாயு போன்றவர்களிடமும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அன்பு காட்டினார் . பூரி பீடாதிபதிக்கு ராமாயண தத்துவம் புரியவில்லை .


Velan Iyengaar
ஜன 08, 2024 20:32

மிருகங்களிடம் காட்டும் அதே வகை அன்பை சக எல்லா பிறப்பு மனிதர்களிடமும் காட்டுங்களேன் எதற்கு சனாதன பிரிவினைகள்??பூரி பீடாதிபதிக்கு இதை சொல்ல தெரிந்த நீர்....சனாதன ஏற்றத்தாழ்வு கட்டமைப்பு குறித்து கருத்து சொல்வீரா??


ellar
ஜன 08, 2024 16:50

மடம் ராம ஜன்மபூமி இடிக்கப்பட்டதாக சொன்ன காலத்தில் என்ன செய்தது


Velan Iyengaar
ஜன 08, 2024 20:37

பிற மற்ற மடங்கள் என்ன செய்ததோ அதையே தான் இந்த மடமும் செய்தது இப்போ மட்டும் இந்த மடத்தின் மீது வன்மம் ஏன்?? நான் இந்த பீடாதிபதி கூறிய கருத்தை ஏற்கவில்லை..... நரேந்திரதாஸ் தாமோதர் மோடி இது போன்ற மடங்கள் மீது கரி பூசியது கண்டு மகிழ்ச்சியே ஆனால் நரேந்திரதாஸ் தாமோதர் இந்த செயலை செய்தது பெரும்பாலான மக்கள் விருப்பத்திற்கேற்பப்ப இல்லை என்பதும் தன்னுடைய பிம்பத்தின் மீது கொண்ட அகங்காரம் காரணம் என்பதால் இதை நான் வேறொரு கோணத்தில் வெறுக்கிறேன் இந்த காரியத்தை பெரும்பாலான மக்களின் எண்ணத்திற்கேற்ப செய்திருந்தால் அவர்கள் கோணத்திற்காக செய்திருந்தால் நான் மோடி விசுவாசியாக மாறியிருப்பேன்


kannan
ஜன 08, 2024 14:56

அப்படண்டீஸ், பூரி சாமியார் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியும்


Sivagiri
ஜன 08, 2024 14:15

- யோகி - கோவில் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்வதற்கான யோக்கியதை உள்ளது . . - மேலும் சாஸ்திரங்களை கற்று கரைத்து குடித்து விட்டால் மட்டும் தகுதி வந்து விடாது - வாழ்வதுதான் தகுதி வருவதற்கு அடிப்படை . . . முன்காலத்தில் பிரசித்தி பெற்ற கோவில் மூலஸ்தான விக்கிரகங்கள் எல்லாம் , தவ யோகிகள் , சித்தர்கள் , சுத்த பத்தினி பெண்கள் - பிரதிஷ்டை செய்ததுதான் -


RADE
ஜன 08, 2024 13:52

சதுர் வேதம் என்ன சொல்கிறது, இந்த நிகழ்வு அதில் எதை கடை பிடிக்க படுகிறது. அதை தான் பார்க்கணும். விதி மீறல் இருக்க கூடாது


அப்புசாமி
ஜன 08, 2024 16:10

வேதத்தில் இதெல்லாம் கிடையாது. வேதகாலத்தில்.கோவில்களே கிடையாது.


Velan Iyengaar
ஜன 08, 2024 13:44

அப்போ அயோத்தியில் தோட்டாதரணி செட் போல தான் போடறாங்களா?? ஹி ஹி.....சனாதனம் எப்படி எல்லாம் வழியுது... நெளியுது... மழுங்குது... வழுக்குது...உடையுது....நசுங்குது....ஹா ஹா ஹா ஹா ஹா ....


A P
ஜன 08, 2024 20:24

நன்றி உள்ள நாலுகால் பிராணியே அப்பப்ப வாலாட்டாதே . யாராவது பார்த்தால் ஓட்ட நறுக்கி விடுவார்கள்.


Velan Iyengaar
ஜன 08, 2024 20:43

மோடி கையால் ப்ரதிஷ்ஷ்ட்டை செய்யப்படும் அயோத்தி ராமருக்கு ....பூரி பீடாதிபதி கோணத்தில் சக்தி இல்லாத வெறும் பொம்மை தான்ஹா ஹா ஹா ஆஹ்... இந்த சண்டையில்... சனாதனத்தின் அழுக்கு எல்லாம் வெட்டவெளிச்சமாகுது


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ