மேலும் செய்திகள்
சச்சின் போல வைபவ் சூர்யவன்ஷி சாதனை: சசிதரூர் பாராட்டு
1 hour(s) ago
இறந்த நிலையில் சமூகம்: ராகுல் கருத்தால் மீண்டும் சர்ச்சை
3 hour(s) ago | 15
ஹைதராபாத், தெலுங்கானாவில் எதிர்க்கட்சியாக உள்ள பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., வெங்கடேஷ் நேதா, நேற்று காங்கிரசில் இணைந்தார். தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், பாரத் ராஷ்ட்ர சமிதியின் பெத்தபள்ளி லோக்சபா தொகுதி உறுப்பினராக உள்ள வெங்கடேஷ் நேதா, நேற்று புதுடில்லி சென்றார்.அங்கு காங்., பொதுச்செயலர் வேணுகோபால் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். இதன்பின், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த 2018ல் தெலுங்கானா மாநில கலால் துறையில் பணியாற்றிய வெங்கடேஷ் நேதா, தன் பதவியை ராஜினாமா செய்து காங்கிரசில் இணைந்தார். அந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும், அக்கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். எனினும், சில மாதங்களில் பாரத் ராஷ்ட்ர சமிதியில் இணைந்தார். அதன்பின் 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் பெத்தபள்ளி தொகுதியில் முதன்முறையாக களமிறங்கி வெற்றி பெற்றார்.
1 hour(s) ago
3 hour(s) ago | 15