உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 25 வேட்பாளர் அறிவித்தது பகுஜன் சமாஜ்

25 வேட்பாளர் அறிவித்தது பகுஜன் சமாஜ்

கலபுரகி, : கர்நாடகத்தின் 25 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்து உள்ளது.கலபுரகியில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் மாரசந்திர முனியப்பா அளித்த பேட்டி:கர்நாடகத்தில் எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. 28 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம். மதங்களை பிரித்து பா.ஜ.,வும், ஜாதிகளை பிரித்து காங்கிரசும் ஆட்சி செய்கின்றன. எனவே தான் அவர்களிடம் இருந்து விலகி நிற்கிறோம்.எனவே, முதல்கட்ட பட்டியலில் 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ