உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பதில் சிக்கல்?

பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பதில் சிக்கல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ)காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனால் அவர், பாரீசில் நடக்கும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படலாம் எனக்கூறப்படுகிறது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் பஜ்ரங் புனியா. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷணுக்கு எதிராக சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் ஆகியோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.இந்நிலையில், மார்ச் 10ம் தேதி ஹரியானா மாநிலம் சோனாபட்டில், நடந்த ஊக்கமருந்து சோதனைக்கு பஜ்ரங் புனியா, அவரது சிறுநீரை வழங்கவில்லை. இதனையடுத்து அவரை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது.ஒலிம்பிக் தொடரில் 65 கிலோ மல்யுத்த பிரிவில் கலந்து கொள்ள இதுவரை எந்த இந்திய வீரர்களும் தகுதி பெறவில்லை. இதற்காக தகுதி போட்டிகள் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. ஆனால், என்ஏடிஏ சஸ்பெண்ட் காரணமாக பஜ்ரங் புனியா இதில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. இதனால், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் எனக்கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

MADHAVAN
மே 06, 2024 11:06

தவறான செய்தி இது


Rajagiri Apparswamy
மே 05, 2024 17:17

விதிமுறைகளுக்கு அனைவரும் சமம் இவர் ஏன் பரிசோதனைக்கு ஓத்துழைக்க வில்லை ? இது போன்ற நபர்களின் பதக்கங்களை பறிமுதல் செய்ய வேண்டும்


இசக்கிமுத்து,தூத்துக்குடி
மே 05, 2024 15:32

ஊரை கூட்டி சாமியானா பந்தல் போட்டு உண்ணாவிரத போராட்டமா நடத்துறீங்க.....எப்படி மாட்டிருக்க பாத்தியா..... அங்க ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது நீ இங்க உண்ணாவிரதம் இருந்து பொழுதை போக்குங்க


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை