உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் பனி மூட்டம் 44 விமானங்கள் தாமதம்

பெங்களூரில் பனி மூட்டம் 44 விமானங்கள் தாமதம்

பெங்களூரு: பெங்களூரில் அடர்ந்த பனி மூட்டத்தால், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 44 விமானங்கள் தாமதமாக புறப்பட்டனபெங்களூரில் நேற்று காலை முதலே அடர்ந்த பனி மூட்டம் காணப்பட்டது. 10 மீட்டர் தொலைவில் உள்ளவை கூட தெரியவில்லை. இதனால் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டில்லி, சென்னை உட்பட பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய 44 விமானங்கள் புறப்பட தடை விதிக்கப்பட்டது.படிப்படியாக பனி மூட்டம் விலகிய பின், இரண்டு மணி நேரம் தாமதமாக, விமானங்கள் புறப்பட்டு சென்றன.அடர்ந்த பனி மூட்டத்தால், நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள். இடம்: கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ