உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தில் என்ன நிலைமை? பரபர சூழலில் கூடியது அனைத்துக் கட்சிக் கூட்டம்

வங்கதேசத்தில் என்ன நிலைமை? பரபர சூழலில் கூடியது அனைத்துக் கட்சிக் கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி: வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி, ஷேக் ஹசீனா தஞ்சம் என பரபரப்பான சூழ்நிலையில் தலைநகர் டில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் அறிவித்தபடி இன்று தொடங்கியது.

அமைச்சர்கள் பங்கேற்பு

டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே, டி.ஆர்.பாலு ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நடவடிக்கைகள்

கூட்டத்துக்கு தலைமை ஏற்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேசத்தில் தற்போது உள்ள நிலவரம், இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விரிவாக விளக்கிக் கூறினார். டில்லியில் தற்போது தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்தியர்கள் பாதுகாப்பு

மேலும் வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் நிலைமை, சர்வதேச எல்லை பாதுகாப்பு குறித்தும் அவர் விவரித்ததாக தெரிகிறது. இதனிடையே, டில்லியில் வந்து இறங்கிய ஷேக் ஹசீனா பயணித்த ராணுவ விமானம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramanujadasan
ஆக 06, 2024 16:02

இந்தியாவுக்கு வர, அவர் நம்ம முதல் நம்பரிடம் அனுமதி வாங்கினாரா ?


M S RAGHUNATHAN
ஆக 06, 2024 14:53

நம் அரசியல் ஞானி என்ன கருத்து சொல்லி இருப்பார்? அவருக்கு இதெல்லாம் புதுசு. வந்தோமா சமோசா,டீ சாப்பிட்டோமா. போவோமா என்று இருப்பார். கூட ஜெயராம் ரமேஷ் வரவில்லை . ஆகவே ராகுல் சொன்னது, "my comments are reserved.


RAMAKRISHNAN NATESAN
ஆக 06, 2024 14:23

பிரச்னை குறித்து ராகுலின் புரிதலை அறிய ஒரு நல்வாய்ப்பு ........


sundarsvpr
ஆக 06, 2024 14:00

இது முழுமையாய் அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கை. பாதிக்கப்பட்டு வருபவர்களை சோதித்து அனுப்புவது ராணுவ வேலை. அவர்களை எந்த எந்த மாநிலத்திற்கு அனுப்புவது மத்திய அரசின் ரஹஸ்ய பணி . பாரத தேசத்தின்ர் அவர்கள் குடும்பத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும். வங்க தேச பாதிப்பாளர்களை மேற்கு வங்கத்தில் குடிஅமீரத்துவது சரியாய் இருக்காது.


M.COM.N.K.K.
ஆக 06, 2024 13:52

கூடி என்ன செய்யப்போகிறார்கள் ஒன்றும் புரியவில்லையே கூடத்தின் முடிவு என்னவாக இருக்கும் உன்னிப்பாக நமது அரசு கவனித்து வருகிறது அதுதானே.


S. Narayanan
ஆக 06, 2024 13:47

அடைக்கலம் என்று வந்தவர்களை சாதி மத வேறுபாடின்றி மதிக்கும் பண்பு இந்தியாவுக்கு உண்டு


ஆரூர் ரங்
ஆக 06, 2024 16:11

ஒட்டகம் கூடாரத்துக்குள் தலையை மட்டும் நீட்டிக் கொள்ள அனுமதி கேட்டது.? பின்னர் என்னானது?


Yaro Oruvan
ஆக 06, 2024 13:12

எதிரி கட்சிகளின் நிலைமை திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி.. எதிர்ப்பு தெரிவிச்சா ஒட்டு ஓடுற எஜமானர்களுக்கு கோவம் வந்துரும்.. அதுல பாருங்க அவனுவலுக்கு கோவம் வந்தாலும் ஒரு மண்ணும் தோண்டமுடியாது.. ஓட்ட திருட்டு கும்பலுக்கும் கான்+கிராஸ் கும்பலுக்குத்தான் போட்டு ஆவனும் .. இருந்தாலும் நம்ம அரசியல் வியாதி பயலுவ ரொம்ப பயப்படுவானுவ அவனுவ ஓட்டுக்களுக்கு


r ravichandran
ஆக 06, 2024 12:59

எதிர்ப்பு தெரிவித்தால் இஸ்லாமிய எதிர்ப்பு என்று ஆகி விடும் என்று எதிர் கட்சிகள் வேறு வழியின்றி ஆதரவு தெரிவிக்கும்


Kanns
ஆக 06, 2024 12:19

All our Pseudo-Secularists AntiIndia Gangs will be in Biased Coma as in Past


Ramesh Sargam
ஆக 06, 2024 12:03

ராகுல் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களால் ஏன் அடைக்கலம் கொடுத்தீர்கள் என்று கேட்கமுடியாது. கேட்டால் வோட்டு வங்கியில் ஓட்டுக்குள் குறையும். ஆகையால் மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஆமாம் போடுவார்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி