உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்துவதில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.லோக்சபாவுக்கு முதல் இரண்டு கட்ட ஓட்டுப்பதிவுக்கான இறுதி ஓட்டு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிட்டது. இது விவாதத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ' இண்டியா' கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கார்கே எழுதிய கடிதத்தில், 'இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையில் முரண்பாடுகள் இருக்கின்றன. ஓட்டுப்பதிவு புள்ளி விவரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால் தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுகின்றன. எனது 52 ஆண்டுகால தேர்தல் வாழ்வில் இறுதி நேரத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்ததை நான் பார்த்தது இல்லை''. எனக்கூறியிருந்தார்.இதனை மறுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் தலைவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்துவதில், குழப்பம் மற்றும் இடையூறை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அரசியல் கட்சிகளுக்கு இடையே கடிதம் எழுதப்பட்டு இருந்தாலும், அது பொது வெளியில் பகிரப்பட்டு உள்ளது. இது சந்தேகம் மற்றும் பிரச்னை ஏற்படுவதுடன் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் மனு

இதனிடையே அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் மற்றும் டிஆர்பாலு உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில், '' ஓட்டுப்பதிவு விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும். எவ்வளவு வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டளித்தனர் என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Veeraa
மே 11, 2024 12:32

Seen TN election commission how loyal to INDI alliance. How much percentage they informed on 19th May


தாமரை மலர்கிறது
மே 10, 2024 19:14

தேர்தல் கமிஷன் அக்கப்போர் பேர்வழிகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை ஜூன் நாலாம் தேதி ஒரே வரியில் மோடி நாநூற்றிஐம்பது தொகுதிகளை இவ்வள்வு வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துவிட்டார் என்று சொல்லி முடித்துவிடுங்கள் அனாவசியமாக இந்த அக்கப்போர் பேர்வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது இல்லை வேண்டுமெனில் சுப்ரிம் கோர்ட்டுக்கு செல்லட்டும் கார்கே போன்றவர்களுக்கு பதில் அளித்து தேர்தல் கமிஷன் அதன் இமேஜை குறைத்துக்கொள்ள கூடாது


அரசு
மே 10, 2024 18:55

பாரதீய ஜனதா கட்சியின் கைக் கூலியாக செயல் படும் ஆணையம் வேறு என்ன செய்யும்?


Sathyan
மே 11, 2024 04:32

முஸ்லீம் மதத்தவர்கள் நாட்டை கொள்ளை அடித்த காங்கிரஸ்க்கு அடிமையாக இருக்கும் போது , நாட்டை காக்கின்ற நல்லவர்களுக்கு அடிமையாக இருப்பதில் தவறில்லை


Syed ghouse basha
மே 10, 2024 18:55

சூப்பர் தேர்தல் ஆணையம் பஜக வின் கிளையாக பதில் அளித்துள்ளது தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் முன்னுக்கு பின் முரணாக சொல்வதும் அதை கேள்வி கேட்டால் தேர்தலை சீர்குழைப்பாதாக சொல்வதும் நல்ல தமாஷ் பொறுப்பான தேர்தல் ஆணையம் மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டுமே தவிர இதுபோன்று பொறுப்பில்லாமல் பேசுவது சரிஅல்ல


kumarkv
மே 10, 2024 22:58

ஒரு பாகிஸ்தானியிடமிருந்து என்ன கருத்து வரும்


Sathyan
மே 11, 2024 04:34

முஸ்லீம் கூட்டம் எல்லாமே இப்படி தான் கீழ் நிலையாக யோசிக்கும் போல


Vinayagamurugan Sundaramoorthy
மே 10, 2024 18:05

இவர்கள் எந்த அமைப்பைத்தான் நியாயமாக செயல்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்


Srinivasan Krishnamoorthi
மே 10, 2024 17:57

தேர்தல் தேறுதல் தரும் நேரம்


குமரி குருவி
மே 10, 2024 17:45

எங்கே போனாலும் கோவலப்பட வேண்டிய நிலையில் காங்கிரஸ்


என்றும் இந்தியன்
மே 10, 2024 17:42

என்ன கார்கே இது???


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை