உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறைக்கு செல்ல தயாராக இருங்கள்: ஆம்ஆத்மியினருக்கு கெஜ்ரிவால் அலர்ட்

சிறைக்கு செல்ல தயாராக இருங்கள்: ஆம்ஆத்மியினருக்கு கெஜ்ரிவால் அலர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிப்பது, ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பது என்று நீங்கள் பேசினால், சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். எனவே, அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்'' என ஆம்ஆத்மி கட்சியினர் மத்தியில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், நாளை மறுநாள் (ஜன.,3) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனருமான கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை அனுப்பிய சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால் இந்த முறை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவார் என கூறப்படுகிறது.இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது: நாம் ஒரு போராட்டத்தை எதிர்கொள்கிறோம் என்று நினைக்கிறேன்; ஆனால் அதற்காக வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து தொடர்பில் தான் இருக்கிறேன். இன்று சிறையில் இருக்கும் நமது ஐந்து தலைவர்கள் எங்கள் ஹீரோக்கள். அவர்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். வேறு எந்தக் கட்சிகளும் கவனம் செலுத்தாத விஷயங்களில் கவனம் செலுத்தியதால், சில ஆண்டுகளிலேயே அரசியலில் ஆம்ஆத்மி கட்சி உயர்ந்துள்ளது. கல்வி, சுகாதாரம், மின்சாரம், பணவீக்கம், வேலை வாய்ப்பு என்று எந்தக் கட்சியும் செய்யாததைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிப்பது, ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பது என்று நீங்கள் பேசினால், சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். எனவே, அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.நாட்டிலேயே முதன்முறையாக இந்தக் கட்சிகளுக்கு மாற்றாக மக்களுக்கு உண்மையான மாற்றம் கிடைத்துள்ளது. நாங்கள் வெற்றிபெறவில்லை அல்லது நல்லது செய்யவில்லை என்றால், எங்கள் கட்சித் தலைவர்கள் யாரும் சிறைக்குச் சென்றிருக்க மாட்டார்கள், இன்று அனைவரும் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Thirumalaimuthu L
ஜன 02, 2024 07:42

அரசின் கஜனாவிற்கு போகும் வரி வருவாய் பணத்தை கொள்ளை அடித்து இப்போது ஜெயிலில் இருப்பவர்கள் நல்லவர்கள் என்று பேசும் டெல்லி முதல்வரும் அவர்களுக்கு உடந்தை எனில் முதல்வரும் இந்த ஊழல் வழகில் தொடர்பு உள்ளவர் என்பது தெளிவு. ஊழலுக்கு எதிராக ஆரம்பிக்க பட்ட கட்சி இப்போது ஊழல் செய்வதுடன், ஊழல் கட்சிகளுக்கு துணை போகும் அவலம். இவரது நம்பிக்கை டெல்லி சிறுபான்மையினரின் ஆதரவு பிஜேபி க்கு எதிர் என்ற நிலையில் வேறு வழி இல்லை AAP க்கு தான் போட்டு ஆகணும் இல்லை பிஜேபி வந்திடும் என்ற சூழல் தான் இவர் தொடர்ந்து பெரும் வெற்றி ????????


Sridhar
ஜன 01, 2024 20:17

மாபெரும் தப்புக்களை பண்ணிவிட்டு எப்படியெல்லாம் உருட்டறான் பாருங்க கோர்டே ஜாமீன் மறுக்கற அளவுக்கு மோசமான ஊழல் குற்றங்கள் பண்ணிட்டு, இன்னைக்கு மாட்டிகிட்டோம்னு தெரிஞ்சதுக்கப்புறம் எதோ மக்களுக்கு நல்லது பண்ணினானாம், அதுனால சிறையிலே தள்ளுறாங்களாம். இத நம்பறதுக்கும் ஒரு கூட்டம் பின்னால இருக்குன்னு நினைக்கும்போது ரொம்பவே வருத்தமா இருக்கு. மக்கள் பாவம் அப்பாவிகள்தான், அவர்களை சுலபமாக உணர்ச்சிவசப்படச்செய்து திசைதிருப்பி ஏமாற்றிவிடமுடியும். ஆகவே, இந்த முயற்சிகளில் ஈடுபடும் அயோக்கிய அரசியல்வாதிகளை முதலில் முற்றிலுமாக கலையெடுக்கவேண்டும். அதை செய்யாவிட்டால், மக்கள் வோட்டுப்போடுகிறார்கள் என்று சொல்லிச்சொல்லியே அவர்களை மொத்தமாக மொட்டை அடித்துவிடுவார்கள் இந்த அயோக்கியர்கள். மக்கள் விழித்துக்கொண்டு திருந்துவதற்கு முன்பாகவே அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிடுவார்கள் இந்த நாசகாரர்கள். உடனே சிறையில் அடைத்து இந்த சாபக்கேடுகள் இனிமேல் எந்த பதவியிலும் அமரமுடியாதபடி தண்டனை கொடுக்கவேண்டும்.


ஆசமி
ஜன 01, 2024 19:33

Mega Fraud no 1


RAMAKRISHNAN NATESAN
ஜன 01, 2024 19:11

இவரை வளர்த்த அன்னா ஹசாரே இருக்காரா இல்ல போயிட்டாரா ன்னு கூட தெரியாத அளவுக்கு தலையைக் காட்டாம இருக்காரு ........


jayvee
ஜன 01, 2024 18:18

ஹிந்தி பேசும் கருணாநிதி இவர்.


vbs manian
ஜன 01, 2024 17:55

யாருக்கு எது நடக்க வேண்டுமோ அது நிச்சயம் நடக்கும்.


duruvasar
ஜன 01, 2024 17:48

இந்த ஆள் என்ன இப்படி பயத்தில் பெனாத்துகிறார். புலிக்கு பயந்தவங்க என்மேல் படுத்துகுங்க என்பது இந்த மனிதருக்கு சரியாக பொருந்தும்.


GMM
ஜன 01, 2024 17:07

கேஜ்ரிவால், மது பணக்காரரை ஏழை ஆக்கிவிடும். ஏழையை பரம ஏழை , நோயாளியாக ஆக்கிவிடும். நோயை வளர்த்து இலவச சிகிச்சை. மதியை மயக்கி தரமான கல்வி. திராவிட மாடல்? ஆம் ஆத்மிக்கு தான் புரியும். மதுபான கொள்கை ஊழலில் 5 ஆம் ஆத்மி தலைவர்கள் ஹீரோ? கொஞ்சம் வெட்கம் தேவை. பஞ்சாப் காலிஸ்தான் ஆதரவு, அளவுக்கு அதிகமாக இலவச வாக்குறுதி, போராட்ட ஆதரவு.. ஆம் ஆத்மி வெற்றிக்கு காரணம். கெஜ்ரிவால் சிறை தண்டனை மூலம் டெல்லி மக்களுக்கு புத்தாண்டு சிறப்பாக துவங்கும்? கைதிகளுக்கு கல்வி போதிக்கலாம்.


Barakat Ali
ஜன 01, 2024 16:45

நீங்க பெரிய யோக்கியர் ன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க ......


DVRR
ஜன 01, 2024 16:44

"குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிப்பது, ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பது" என்று நீங்கள் பேசினால், அதன் உண்மையான அர்த்தம் "குழந்தைகளுக்கு நல்ல கலவி அளிப்பது (சிறுமி கற்பழிப்பு)", "ஏழைகளுக்கு அவர்கள் உடலுறுப்புகளை இலவசமாக திருடி பணம் வாங்கி சிகிச்சை அளிப்பது" என்று உண்மையான அர்த்தம் ஆகவே தான் சிறைக்கு செல்லவேண்டியிருக்கும் என்று சொன்னது சரியே - என்ன சொறிவால் இது தானே உண்மை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை