உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " இது முடிவின் ஆரம்பம் " முன்னாள் டீன் கைதுக்கு கவர்னர் சொன்ன பதில்

" இது முடிவின் ஆரம்பம் " முன்னாள் டீன் கைதுக்கு கவர்னர் சொன்ன பதில்

புதுடில்லி: 'ஊழல் வழக்கில் கோல்கட்டா மருத்துவமனையின் முன்னாள் டீன் சந்தீப் கோஷ் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டது தான் முடிவின் ஆரம்பம்' என மேற்குவங்க கவர்னர் ஆனந்த போஸ் தெரிவித்தார்.மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் கொலை சம்பவம் நிகழ்ந்த ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில், முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ். சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து மருந்து, மாத்திரைகளை விற்றது, நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது எழுந்தன.

கைது

உரிய விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.,க்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். புகார்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், சந்தீப் கோஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

ஒரு வரி பதில்!

இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, இதுதான் முடிவின் ஆரம்பம் என மேற்குவங்க கவர்னர் ஆனந்த போஸ் ஒரு வரியில் பதில் அளித்தார். மேலும் தகவல் கூறுமாறு நிருபர்கள் கூறியதற்கு, விவரம் தெரிவிக்காமல் ஆனந்த போஸ் சென்று விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mani . V
செப் 03, 2024 10:14

எம்ஜியார், சிவாஜி காலப் படத்தின் வில்லன் போன்று இருக்கிறார்.


Palanisamy T
செப் 03, 2024 09:55

என்றைக்கு மாநில கவர்னர்கள் முதலமைச்சர்களாகவும் செயல்பட அனுமதிக்கப் பட்டார்கள்.


rsudarsan lic
செப் 03, 2024 09:04

வன்கொடுமையை ஆராய்வதற்கு பதில் ஆக ஊழல் ஆராய்ச்சி காதுல பூ


rsudarsan lic
செப் 03, 2024 09:02

இத்தனை நாள் என்ன செய்தாய் என்று ஒரு நாள் கேள்வி கேட்பார்கள் நீர் தானே பல்கலை கழகங்களின் வேந்தர்?


AMLA ASOKAN
செப் 03, 2024 08:32

இன்றைய ஆளுநர்களில் பலர் ஜனாதிபதியை போல் அரசியலில் தலையிடாமல். தனது மரியாதையை காப்பாற்றிக்கொள்ள தெரியாதவர்களாக உள்ளனர் . ராஜ்பவனில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தேவையில்லாமல் எதையாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்துவதையே பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். .


J.Isaac
செப் 03, 2024 08:14

யாருக்கு யாரும் முடிவுகட்டுவது நம் கையில் இல்லை


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 03, 2024 11:59

அப்போ பெண் டாக்டருக்கு முடிவு கட்டியது ஆண்டவரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை