| ADDED : ஜூன் 12, 2024 10:43 AM
புதுடில்லி: பறவை காய்ச்சலால், பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, 3 மாத சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி பறவைக்காயச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல், அதிக காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அவர், குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த பிப்., மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தச் சிறுமி, 3 மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார். அந்த சிறுமி வசித்த வீடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கோழிப்பண்ணைகள் உள்ளதாகவும், அவரை தவிர குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.பறவைக்காய்ச்சலால், இந்தியாவில் மனிதர்கள் பாதிக்கப்பட்ட நிகழ்வு இது இரண்டாவது ஆகும். ஏற்கனவே, 2019 ல் ஒருவர் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் .